உலகளவில் பல லட்சம் பேர் உடல் எடை அதிகரிப்பு காரணமாக பாதிப்புக்குள்ளாகின்றனர். எடை அதிகரிப்பதால் இதய நாேய் பாதிப்புகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். இதைத்தவிர்க்க நாம் தர்பூசணி அல்லது கிர்ணி பழத்தை சாப்பிடலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெலன் பழங்கள்..


மெலன் பழங்களை, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இவற்றை உடல் எடையை குறைக்கவும் உபயோகிக்கலாம். 


தர்பூசணி மற்றும் கிரிணி பழம் ஆகிய இரண்டிலும் கார்போ ஹைட்ரேட் சத்துகள் அடங்கியிருக்கின்றன. இதை சாப்பிடுகையில் தானகவே நம் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், இதனை தங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இவை இரண்டையும் சாப்பிடுவதால் என்ன நடக்கும் என்பதையும், இதை சாப்பிடுவதற்கு முன்பாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் இங்கு பார்ப்போம்.


கவனித்தில் கொள்ளவேண்டியவை..


இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கவும்:


கிரிணி பழம் அல்லது தர்பூசணி பழத்தை சாப்பிடுவதற்கு முன்னர், ரத்த சர்க்கரை அளவு எப்படியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். 


புரதம்:


பழங்களை சாப்பிடும் போது அதனுடன் புரதம் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமானம் மெதுவாக ஆகலாம். அது மட்டுமன்றி, இப்படி சாப்பிட்டால், ரத்ததில் சர்க்கரை அளவும் குறையலாம். 


தர்பூசணி:


தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருக்கிறது. எனினும், இதில் குறைந்தளவு கலோரிகள்தான் இருக்கின்றன. நல்ல ஸ்னாக்ஸாகவும் வயிறு நிறைய வைக்கும் உணவாகவும் இருக்கும் உணவு பொருட்களுள் ஒன்று, தர்பூசணி. இதில், உடல் கொழுப்புகளை குறைக்கும் சத்துகளும் இருக்கின்றன. இதனால், கலோரிகளை குறைத்து, உடல் தசைகளை குறைக்கலாம். உடற்பயிற்சி செய்பவர்கள், தசை வலியை குறைக்க தர்பூசணி சாப்பிடலாம். என்னதான் தர்பூசணி சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்தால்தான் உடல் எடை குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 


கிர்ணி பழத்தில் இருக்கும் நன்மைகள்:


>கிர்ணி பழம், சம்மர் சீசனில் அதிகம் சாப்பிடப்படும்/ஜூஸ் போடப்படும் பழங்களுள் ஒன்றாகும். அது மட்டுமன்றி, இதில் ஏ,சி,பி உள்ளிட்ட வைட்டமின் சத்துகளும் இருக்கிறது. மெக்னீசியம், மங்கனீசு, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் உடலை வலிமையாக்க உதவும். 


>முலாம்பழம் நீர்ச்சத்து மிக்க பழங்களுள் ஒன்றாகும். இதை சாப்பிடால் உடல் நீர்ச்சத்துடன் இருக்கும். இதன் விதைகளிலும் கூட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. 


>கண் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்களுள் ஒன்று கிர்ணி பழம். இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் சத்து, கண் பார்வையை அதிகரிக்கிறது. கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது. 


>தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் கூட கிர்ணி பழத்தை சாப்பிடலாம். 


உடல் எடையை குறைக்க, இரண்டு பழங்களுமே உதவும் என்று கூறும் மருத்துவர்கள், இதனுடன் சேர்த்து சரியான அளவு டயட்டும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ