உடல் எடையை பராமரிப்பதற்கு வழக்கமாக கொடுக்கும் உதவிக்குறிப்புகளில் பருமனானவர்களுக்கே பலரும் உதவுகின்றனர். ஆனால், உடல் எடை பராமரிப்பு என்பது எடை குறைவானவர்களுக்கும் அவசியம் தானே? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கான எடை அதிகரிப்பு டிப்ஸ் இது. வேண்டுமானால், எடை குறைக்க விரும்புபவர்கள், இதை படித்து, இதற்கு மாற்றாக நடந்தால் எடை குறைந்துவிடும் (Weight Loss). ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 


உண்மையில் மாங்காய் உடல் எடையை பராமரிக்கும், மாம்பழம் உடல் எடையை அதிகரிக்கும் தெரியுமா? வாழைக்காயின் தன்மையும், அது பழுத்து வாழைப்பழமாகும்போது அது கொடுக்கும் சத்துக்களும் மாறுபடும் தெரியுமா?


தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரித்தால் ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்டலாம், பெருக்கலாம். ஆனால் வகுக்க முடியாது. 



பாலில் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் கலந்து குடிக்கலாம். சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி அதிக முறைகள் உண்ணலாம்.  ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். 


உணவுக்குப் பிறகு நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் உடல் எடை கூடும்.  எள்ளால் தயாரிக்கப்படும் திண்பண்டங்களை தொடர்ந்து சாப்பிட்டால் எடை கணிசமாக (Weight Gain) கூடும். உடற்பயிற்சி என்பது பருமனானவர்களுக்கு மட்டுமா? ஒல்லியானவர்களுக்கும், உடல் எடையைக் கூட்ட சில உடற்பயிற்சிகள் உள்ளன, அதை முறையாக கற்றுக் கொண்டு செய்தால் உடல் எடை கூடும். 


குறைந்த நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும். குறைவாக தூங்குவதால் அதிக பசி ஏற்பட்டு, கூடுதலாக சாப்பிட தோன்றும். எனவே ஒல்லியானவர்கள், தூக்க நேரத்தை குறைக்கவும். சர்க்கரை கலந்த மில்க்க்ஷேக் , பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை மாலை நேரத்தில் சாப்பிடலாம். 


காலை , இரவு பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும். தினமும் இரண்டு பேரீச்சம் பழமும் பாலும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.


READ ALSO | இரவு தூங்கும் முன் ‘இந்த’ மேஜிக் ஜூஸ் குடித்து வந்தால் கை மேல் பலன்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR