காபி குடித்தால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?
தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் காபி குடிப்பது, இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்கும் மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகிறது.
பொதுவாக காபி குடிப்பது நமது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது, நமது ஆற்றலை அதிகரிக்கக்கூடிய இந்த பானத்தை பற்றிய நிறைய கருத்துக்கள் நிலவி வருகிறது. பலரும் தங்கள் நாளைத் தொடங்கும்போதோ அல்லது சோர்வாக உணரும்போது ஒரு கப் சூடான காபியை குடிப்பதை விரும்புகின்றனர். சிலர் பாலுடன் கலந்து தயாரிக்கப்படும் சூடான காபியை விரும்புகிறார்கள், சிலர் குளிர்ந்த காபி, சிலர் பிளாக் காபி என ஒவ்வொருவரும் தங்களது சுவைக்கேற்ப காபியை தேர்வு செய்கின்றனர். நீங்கள் குடிக்கும் ஒரு கப் காபி டைப் 2 நீரிழிவு நோயின் பரவலைக் குறைக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் காபி குடிப்பது, இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்கும் மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகிறது.
மேலும் படிக்க | 30 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!
காபியில் காஃபின் என்கிற பொருள் நிறைந்துள்ளது, இந்த காஃபினை நீங்கள் உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலிலுள்ள கொழுப்பு குறைவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. காபி குடிப்பது உங்கள் எடையை நிர்வகிக்க உதவுகிறது. ஒரு கப் காபி குடிப்பதால் மனச்சோர்வு அபாயம் குறையும் என்று ஆய்வுகள் காண்பிக்கிறது. காபியில் உள்ள காஃபின் என்கிற பொருள் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் கட்டுப்பாடற்ற இயக்கங்களை சரிசெய்ய உதவுகிறது.
ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காபி குடிப்பதால் டிமென்ஷியா-அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் காட்டுகிறது. ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் அளவு காபி குடிப்பது ஆரோக்கியமானது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் பால் சேர்க்கப்படாத பிளாக் காபி குடிப்பது உங்கள் எடை இழப்புக்கு சிறந்த பலனை கொடுப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா... உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ