Weight Lose Tips: உடல் எடையை குறைப்பதும், சரியான அளவில் உடலை வைத்திருப்பதும் தான் பலரின் பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது.  உடல் பருமனை கஷ்டப்பட்டு குறைத்துவிட்டாலும், தொப்பையை குறைப்பது பலருக்கும் சவாலானதாக இருக்கிறது.  உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையை மாற்றுவது மிகவும் அவசியம், பெரும்பாலும் நமது உடல் எடை அதிகரிப்பிற்கு நமது ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் தான் முக்கியமான காரணமாக அமைகிறது.  ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கம், உட்கார்ந்த வாழ்க்கை முறை போன்ற வழக்கங்களை மாற்றினாலே நமது உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.  அதிக எடையுடன் இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.  உடல் எடையை குறைக்க பலரும் பல பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.  சிலர் கடுமையான உடற்பயிற்சிகளோடு சேர்த்து, கடுமையான உணவு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.  இருப்பினும் சில சமயங்களில் பல பிரச்சனைகளுக்கு எளிய வீட்டு வைத்தியம் சிறந்த பலனை தருகிறது.  அதேபோல உடல் எடை குறைப்பிற்கு நாம் சில எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரசாயனம் இல்லாமல் பச்சைப் பப்பாளியை பழுக்க வைப்பது எப்படி? சூப்பரான டிப்ஸ்


உடல் எடை குறைப்பில் எலுமிச்சம்பழம் சிறந்த பலனை தருகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது, உடலில் உள்ள கொழுப்பை விரைவாக எரிக்க எலுமிச்சை உதவுகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளது.  எனவே விரைவாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எலுமிச்சை டிடாக்ஸ் டிரிங்கை குடிக்கலாம்.  இந்த பானத்தை தயாரிக்க 4 கிளாஸ் எலுமிச்சை சாறுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேனைப் பயன்படுத்த வேண்டும் இந்த பானத்தை குடிப்பதன் மூலம் உடலிலுல்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.


லெமனேட் செய்ய தேவையான பொருட்கள் : 


- 8 கப் தண்ணீர்
- 6 எலுமிச்சை
- 1/2 கப் தேன்
- சில ஐஸ் கட்டிகள்
- 10 புதினா இலைகள்


இந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?


காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன், வெறும் வயிற்றில் 1 கிளாஸ் எலுமிச்சை தண்ணீர் குடிக்கவும்.  காலை உணவிற்கு பெரும்பாலும் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.  காலை 11 மணிக்கு மீண்டும் 1 கிளாஸ் எலுமிச்சை தண்ணீர், 1 வாழைப்பழம் மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும்.  மதிய உணவில் காய்கறி சாலட் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அதனுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.  அதன் பின்னர் 4 மணியளவில் மீண்டும் 1 கிளாஸ் எலுமிச்சை தண்ணீர் மற்றும் சில பழங்களை உட்கொள்ள வேண்டும்.  இறுதியாக இரவு உணவிற்கு எலுமிச்சை சாறு, சாலட் மற்றும் மீன் சாப்பிடலாம் மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை கலந்த பானத்தை குடிக்க வேண்டும்.


மேலும் படிக்க | மைக்ரேன் தலைவலி பாடாய் படுத்துதா? இதோ சில வீட்டு வைத்தியங்கள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ