ஒரு வாரத்தில் 5 கிலோ வரை உடல் எடையை குறைக்கும் உணவு முறை
Weight Loss Foods: நாம் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறோம். ஆனால் இரவு உணவில் சில பொருட்களை உட்கொள்வதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள்: நாம் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறோம், ஆனால் உடல் எடை அதிகரிப்பால் இது சாத்தியமில்லை. எடை அதிகரிப்பால், நாமும் பல கடுமையான நோய்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் அனைவரும் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள். அதே சமயம் உடல் எடையை குறைக்கும் போது உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், காலை உணவு சத்தானதாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். அதேசமயம் இரவு உணவு இலகுவாக மட்டுமே இருக்க வேண்டும். எனவே இரவு உணவில் சில பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அவை என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்-
பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் உங்கள் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, மேலும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அதனால்தான் இரவு உணவில் பாசிப்பருப்பு சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
ஜவ்வரிசி உப்புமா
ஜவ்வரிசி உப்புமாவில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது, ஜவ்வரிசி உப்புமா பொதுவாக விரத நேரத்தில் உண்ணும் லேசான உணவாகும். ஆனால் நீங்கள் தினமும் இரவு உணவில் ஜவ்வரிசியை உட்கொண்டால், உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
பப்பாளி சாலட்
பப்பாளி மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. எனவே பப்பாளியை இரவு உணவில் உட்கொள்ளலாம். இதை செய்ய, ஒரு பாத்திரத்தில் பப்பாளி, கேரட், வெள்ளரி துண்டுகளை வெட்டிக்கொள்ளவும். இப்போது அதில் சோயா சாஸ், அரிசி வினிகர் மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும். உங்கள் பப்பாளி சாலட் தயார். இது தவிர இரவில் கஞ்சி, ஓட்ஸ், பாஸ்தா போன்றவற்றையும் செய்து உட்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Vitamin A Deficiency: வைட்டமின் ஏ குறைபாடு அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ