உடல் எடை அதிகரிப்பால் அவதியா? இந்த சுவையான சாலட் சாப்பிட்டு எடையை குறைக்கலாம்
Weight Loss Foods: இந்த சுவையான சாலட்டை சாப்பிட்டால் மிக எளிதாக உடல் எடையை குறைக்கலாம். வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளின் இந்த சாலட்டை நீங்களும் சபபிட்டு பாருங்கள்.
உடல் எடை குறைக்க ஒரு சுவையான வழி: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகரித்து வரும் உடல் பருமனால் கவலையில் உள்ளனர். உடல் பருமன் பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் முக்கியம். ஆனால், உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமானால் ஒரு சுவையான சாலட்டை கொண்டு அதை எளிதாக செய்யலாம் என்பது பலருக்குத் தெரியாது.
வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் கொண்டு செய்யப்பட்ட செய்யப்பட்ட சாலட்டை உங்கள் உணவில் சேர்த்தால் நல்ல பலன்களை காணலாம். இது உங்கள் எடையை விரைவாகக் குறைப்பது மட்டுமல்லாமல், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். ஏனெனில் வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் சாலட் சாப்பிடுவதால் உடல் நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த சாலட்டை உட்கொண்டால், உங்கள் உடல் எடையை அதிகரிக்காது. மேலும் நீங்கள் பலவீனமாகவும் உணர மாட்டீர்கள்.
ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு செய்யும் சாலட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் இங்கே காணலாம்:
வெள்ளரி மற்றும் ஆப்பிள் சாலட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
கலோரி அளவு குறைவாக இருக்கும்:
எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன. பல காரணங்களால் உடல் எடை கணிசமாக அதிகரிக்கிறது. ஆனால் வெள்ளரி மற்றும் ஆப்பிளில் மிகக் குறைவான கலோரிகளே காணப்படுகின்றன. ஆகையால், வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் சாலட்களை இரவில் சாப்பிடுவது மிகவும் அவசியம். இதனால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
மேலும் படிக்க | தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: எந்த வயதினர் எந்த டயட்டை பின்பற்ற வெண்டும்? விவரம் இதோ
செரிமானத்திற்கு உதவுகிறது:
உங்கள் செரிமான அமைப்பும் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மறுபுறம், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவை வெள்ளரி மற்றும் ஆப்பிளில் உள்ளன. இவற்றின் மூலம் உங்கள் செரிமான அமைப்பு நன்றாக இருக்கும்.
உடலில் உள்ள நச்சு நீங்கும்
பலர் மனநிலை மாற்றங்கள் (மூட் ஸ்விங்க்ஸ்) ஏற்படும்போது இனிப்பு அல்லது எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட எண்ணுவார்கள். இதன் காரணமாக கொழுப்பு மற்றும் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அப்படி அதிக இனிப்பு மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை உட்கொண்டால் நீங்கள் பல நோய்களுக்கு ஆளாகலாம். இதை தவிர்க்க வெள்ளரி, ஆப்பிளில் செய்யப்பட்ட சாலட் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். அதன் நீரேற்ற பண்புகள் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் பால் குடிக்கிறீர்களா?... கவனம் தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ