எடை இழப்புக்கு பிளாக் காபி: எதை குடித்தால் பித்தம் தெளியும் என்பதுபோல, எதை சாப்பிட்டால், அல்லது, எதை விடுத்தால் உடல் எடை குறையும் என்பதில் மக்கள் மிக கவனமாக உள்ளனர். இதற்காக, உடற்பயிற்சி செய்வது, ஜிம் செல்வது, டயட்டில் இருப்பது என பலவித முயற்சிகளை எடுகிறார்கள். இது தவிர, இயற்கையான பல வழிகளிலும் நாம் உடல் எடையை குறைக்கலாம். அதில் ஒன்றுதான் பிளாக் காபி. பிளாக் காபி எடை இழப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது. இதனால் வளர்சிதை மாற்றமும் நன்றாக இருக்கும். மேலும், உடலின் செரிமான அமைப்பும் நன்றாக வேலை செய்யும். இவற்றின் காரணமாக இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், பிளாக் காபி அல்லது வேறு எந்த முயற்சியை நீங்கள் செய்தாலும், சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியை செய்யாவிட்டால் எந்த முயற்சியும் பயனளிக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிளாக் காபி போன்ற பானங்கள், எடை குறைப்பில் உதவத்தான் செய்யும், முழு பணியையும் செய்யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


காபி உடல் எடையை எவ்வாறு குறைக்கிறது?


அறிவியலின் அடிப்படையில் பார்த்தால், காபியில் உள்ள காஃபின் நரம்பியக்கடத்திகளைத் தூண்டுவதால், அதைக் குடிப்பதால் ஆற்றல் கிடைக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். காஃபின் பல கொழுப்பை எரிக்கும் சப்ளிமெண்ட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, கொழுப்பு திசுக்களில் இருந்து கொழுப்பு அணிதிரட்டத் தொடங்குகிறது மற்றும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.


இதை கலந்து உடல் எடையை வேகமாக குறைக்கலாம்


சில ஆராய்ச்சிகளில் ப்ளாக் காபியில் தேன் கலந்தால், அது விரைவாக எடையைக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், இது மட்டும் உங்கள் எடையை முழுமையாக குறைக்காது என்பதையும்  உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும். பிளாக் காப்பியில் அப்படியே தேன் கலந்து குடிக்க வேண்டும். அதை கொதிக்கவிடவோ, சூடாக்கவோ கூடாது. 


மேலும் படிக்க | குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க இந்த ஸ்னாக்ஸ் உதவும் 


செய்முறை என்ன


பிளாக் காபி தயாரிக்க ஒவ்வொருவருக்கும் அவரவரது முறை என்று ஒன்று இருக்கும். சிலர் பெர்குரேட்டரில் செய்யப்பட்ட காபியை மட்டுமே குடிப்பார்கள். ஆனால் இந்த ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும், காபியை அதிகம் கொதிக்க வைக்கக்கூடாது. உங்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் காபி தூள் போட்டு மூடி வைக்கவும். பின், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அதை குடிக்கவும். 


எடை இழப்புக்கு தேன் எவ்வாறு உதவுகிறது


காபியைப் போலவே தேனும் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை பிரிக்கிறது. உடல் பின்னர் இந்த கொழுப்பை ஆற்றல் சேமிப்பகமாக பயன்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கிறது. இது தவிர, கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. 


பொதுவாக, தேன் எடை இழப்புக்கு நல்லதாக கருதப்படுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் தேன் அல்லது தேன் மற்றும் எலுமிச்சம்பழ ரசத்தை பருகினால் உடல் எடை குறையும் என பல ஆரோக்கிய நிபுணர்கள் அறிவுறை வழங்குகிறார்கள். அதே போல் ப்ளாக் காபியில் தேன் கலந்தும் குடிக்கலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் மருத்துவப் பிரச்சனை இருந்தால், முதலில் உங்கள் உடல்நலப் பாதுகாப்பு நிபுணரிடம் ஆலோசித்து, பின்னர் இதை செய்யவும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த 3 வழிகளை பின்பற்றினால் போதும்! உடல் எடையை எளிதில் குறைக்கலாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ