எடை இழப்புக்கான பானங்கள்: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க, பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை குடிக்கிறார்கள். ஆனால் குளிர்காலத்தில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். குளிர்காலத்தில் பலருக்கு எலுமிச்சை நீரை குடிப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. ஆகையால், குளிர்காலத்தில் எலுமிச்சை நீரை தவிர்ப்பது நல்லது. எனினும், இதனால் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் குளிர்காலத்தில் எலுமிச்சைக்கு பதிலாக வேறு சில பானங்களை குடிக்கலாம். உடல் எடையை குறைக்க, குளிர்காலத்தில் எலுமிச்சை நீருக்கு பதிலாக எந்தெந்த பானங்களை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க எலுமிச்சைப்பழத்திற்கு பதிலாக இந்த பானங்களை உட்கொள்ளலாம்: 


ஓம நீர் 


குளிர்காலத்தில் எலுமிச்சம்பழம் தண்ணீர் குடிக்க விரும்பவில்லை என்றால் அதற்கு பதிலாக ஓமத் தண்ணீர் குடிக்கலாம். இதற்கு, ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, தேநீர் போல உட்கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அதே சமயம் இந்த தண்ணீரை குடித்தால் செரிமானமும் மேம்படும்.


மேலும் படிக்க | இதை பண்ணுங்க! தொப்பையை உடனே குறைக்கலாம்! 


சீரக நீர்


குளிர்காலத்தில் சீரக நீர் உடல் எடையை குறைக்க ஒரு நல்ல வழியாக இருக்கும். அதை குடிக்க, ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இப்போது இந்த தண்ணீரை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். அதே சமயம், தினமும் இதை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும், நல்ல தூக்கமும் கிடைக்கும்.


வெந்தய நீர்


வெந்தய நீர் உட்கொள்வது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த பானங்கள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், குளிர்ச்சியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். வெந்தய நீர் தயார் செய்ய, இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர், அதை காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம், சளி நீங்கும், மேலும் உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படாது. 


தேன் கலந்த நீர்


காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் உங்கள் எடையைக் குறைக்கலாம். இந்த பானம் உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் பணியையும் செய்கிறது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Anti-Aging Water: முக சுருக்கத்தை நீக்கும் அருமருந்து உங்கள் சமைலறையிலேயே இருக்கு ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ