உடல் ஆரோக்கியத்தில் மாயம் செய்யும் பெருங்காயம்.... வியக்க வைக்கும் நன்மைகள்

Health Tips: சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காய நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Health Tips: பெருங்காயம் பல நூற்றாண்டுகளாக நம் இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான பொருளாகும். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெருங்காயத்தில் ஆண்டிஆக்சிடெண்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உட்பட பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் பெருங்காய நீருக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. சில கலாச்சாரங்களில் பெருங்காய நீர் ஒரு பாரம்பரிய தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் எடை இழப்புக்கு உதவும் திறன் உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காய நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் (Sugar Level) கட்டுக்குள் வைக்க பெருங்காய நீர் உதவுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக, பெருங்காய நீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது, இன்சுலினை மிகவும் திறமையாக பயன்படுத்த உடலுக்கு உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவும்
பெருங்காய (Asafoetida) தண்ணீர் எடையை குறைக்கவும் (Weight Loss) உதவும். பெருங்காய நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலில் கலோரி எரியும் விகிதத்தை அதிகரிக்கிப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, பசியை குறைக்கவும் இந்த தண்ணீர் உதவுகிறது. இதனால் நாம் அடிக்கடி ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை விட மோசமானது ஹைப்பர்யூரிசிமியா! ஏன் எப்படி? அதிர்ச்சி தகவல்
பெருங்காய நீரின் நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்தும்
பெருங்காயம் இயற்கையாகவே செரிமானத்தை சீராக்கும் ஒரு பொருளாகும். இதன் நீர் செரிமானத்தை (Digestion) மேம்படுத்த உதவுகிறது. இது வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.
புற்றுநோயில் நன்மை பயக்கும்
பெருங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். புற்றுநோய் (Cancer), இதய நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற பல நோய்களுக்கு ஃப்ரீ ரேடிக்கல்கள் காரணமாகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நோயெதிர்ப்பு (Immunity) மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
தலைவலி
பல நேரங்களில் நாம் பதற்றம் காரணமாக தலைவலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக நாம் வலி நிவாரணிகளை உட்கொள்கிறோம். எனினும், வலி நிவாரணிகளை உட்கொள்வது ஆபத்தாகலாம். ஏனெனில், இவற்றால் பல பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். தலைவலிக்கு இயற்கையான நிவாரணம் வேண்டுமானால் பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து நெற்றியில் தடவி வந்தால் சிறிது நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.
வயிறு உப்பசம்
பலர் வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறார்கள். இது பல பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது. இதனால் தாங்க முடியாத வலியும் ஏற்படுகின்றது. வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் ஆகியவை ஏற்பட்டால், கடுகு எண்ணெயுடன் பெருங்காயப் பொடியை சேர்த்து தொப்புளைச் சுற்றி தடவவும். இப்படி செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை எரிக்கும் மக்கானா... சில சுவையான ரெஸிபிகள் இதோ..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ