உச்சி முதல் பாதம் வரை... வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் செய்யும் மேஜிக்
Health Benefits of Cinnamon Water: தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் அதிகம் விளையும் இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. ஆயுர்வேதத்தில் இதன் மருத்துவ பண்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
Health Benefits of Cinnamon Water in Tamil: சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க, உணவில் பல்வேறு வகையான மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை. தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் அதிகம் விளையும் இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. ஆயுர்வேதத்தில் இதன் மருத்துவ பண்புகள்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. உடலுக்கு இலவங்கப்பட்டை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. சளி காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. கொழுப்பை எரிக்கும் தன்மை கொண்ட இலவங்க பட்டை, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இலவங்கப்பட்டையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
இலவங்கப்பட்டையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, உடலுக்கு மிகவும் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்களில் அடங்கும். இவை தவிர இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் சிறந்த மூலமாக விளங்குகிறது.
இலவங்கப்பட்டை நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
உடல் பருமன்
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறன் படைத்த இலவங்கப்பட்டை நீர் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், காலையில் வெறும் பற்றி இலவங்கப்பட்டை நீரை உட்கொள்ளலாம்.
மூளை ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, மூளை ஆரோக்கியத்திற்கும் இலவங்கப்பட்டை பெரிதும் உதவும். நினைவாற்றலை மேம்படுத்தும் திறன் லவங்கப்பட்டைக்கு உண்டு. அதோடு மன அழுத்தம், பதற்றம், கவலை ஆகியவற்றையும் போக்கி அமைதிப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு.
இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் லவங்கப்பட்டைக்கு உண்டு. இதன் மூலம் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரித்து, மாரடைப்பு பக்கவாதம் போன்ற அபாயத்தை இது தடுக்கிறது.
மேலும் படிக்க | weight loss: டயட் வேண்டாம், ஜிம் வேண்டாம்: எடையை குறைக்க அட்டகாசமான 4 டிப்ஸ்
நோய் எதிர்ப்பு சக்தி
இலவங்கப்பட்டையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட லவங்க பட்டை நோய்களை குணப்படுத்தும் உதவுகிறது.
மூட்டு வலி
ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள இலவங்கப்பட்டை, மூட்டு வலியை போக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து, பல்வேறு வழிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறன் லவங்கப்பட்டைக்கு உண்டு. ரத்த ஓட்டத்தை சீராக்கும் இலவங்கம், கீல்வாதம் தசைவலி ஆகியவற்றையும் சரி செய்யும்.
நீரழிவு நோய்
ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இலவங்கப்பட்டை நீர் உதவும். இன்சுலின் உற்பத்தியை தூண்டி, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவி செய்யும் லவங்க பட்டை, சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும்.
செரிமான பிரச்சனை
வயிறு சம்பந்தமாக ஏற்படும் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பலவித செரிமான பிரச்சனைகளுக்கு இலவங்கப்பட்டை தீர்வை தருகிறது.
பல் வலி
பல் வலியினால் அவதிப்படுபவர்கள், இலவங்கப்பட்டை நீர் குடித்து வந்தால் குணமாகும். அதோடு வாய் புத்துணர்ச்சியும் கிடைக்கும். வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள், இலவங்கப்பட்டை நீரை தவறாமல் அருந்தி வந்தால் பலன் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடம்பை ஸ்லிம்மா சிக்குனு வெச்சுக்க துளசியா? கறிவேப்பிலையா? எது பெஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ