வெறும் வயிற்றில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Benefits of Taking Radish in Empty Stomach: முள்ளங்கி, நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வர, இதய ஆரோக்கியம் முதல் குடல் ஆரோக்கியம் வரை பல வித ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
Benefits of Taking Radish in Empty Stomach: பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ள முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறிகளுள் ஒன்று. முள்ளங்கி குறிப்பாக குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த காய்கறி. சில செரிமான நொதிகளை ஊக்குவிப்பதும், செரிமான செயல்முறையை துரிதப்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணம். மேலும், இது பித்த சாறு செயல்பாட்டையும் சீர்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. இது தவிர, இதில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளை கொண்டுள்ளது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
முள்ளங்கி, நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வர பின்வரும் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். முள்ளங்கியில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளது. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது. முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மூல நோயை குணப்படுத்தும் முள்ளங்கி
முள்ளங்கியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் என்னும் மூல நோய் பிரச்சனை குறையும். முள்ளங்கியில் ராபினின் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் போன்ற வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் கலவைகள் உள்ளன. இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றன. இது தவிர, அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கிறது. இது தவிர மூல நோயால் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
அமிலத்தன்மையை பிரச்சனையை தீர்க்கும் முள்ளங்கி
முள்ளங்கியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அமிலத்தன்மையில் நன்மை பயக்கும். கருப்பு உப்பு சேர்த்து சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும். இது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குளிர்விக்கும் நார்ச்சத்து போல செயல்படும். இதனுடன், காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கியை அதிகம் சாப்பிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாதி சாப்பிட்டால் போதும்.
மேலும் படிக்க | ஆரஞ்சு பழத்தில் இருக்கு உங்கள் எடை இழப்பு ரகசியம்: இப்படி சாப்பிடுங்க
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முள்ளங்கி
மலச்சிக்கல் பிரச்சனையில் முள்ளங்கியை உட்கொள்வது பல வழிகளில் நன்மை பயக்கும். இது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை ஊக்குவிக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதோடு செரிமான வேகத்தை மேம்படுத்துகிறது. மற்றும் குடல்களின் செயல்பாட்டை விரைவுபடுத்துவதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கிறது. முள்ளங்கி சிறந்த மலமிளக்கியயாக செயல்படுகிறது.
இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் முள்ளங்கி
முள்ளங்கி உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது. வயிறு மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு முள்ளங்கி போன்ற காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பதன், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவும் முள்ளங்கி
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை தங்கள் தினசரி நிச்சயம் உணவு சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிறிந்த உணர்வைத் தரும். இதன் மூலம் அதிகமாக உணவு உட்கொளவது தவிர்க்கப்பட்டு தேவையற்ற கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முள்ளங்கி
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி, போலிக், ஆசிட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன. இது இதய நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. மேலும் முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக்கி உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ