Vitamin B12 Deficiency: நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டிய மிக அவசியம். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின்களும், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துகளும் தேவை. இவற்றில், குறிப்பாக வைட்டமின்களின் குறைபாடு ஏற்பட்டால், உடலின் முழு அமைப்பும் கெட்டுப்போகும். உடலுக்கு தேவையான மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் பி12.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வைட்டமின் உடலின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்று. இது கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் இந்த வைட்டமின் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். ஏனெனில் அசைவ உணவுகளில் அதிக வைட்டமின் பி12 உள்ளது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், பல கடுமையான நோய்களால் நாம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்:


இரத்த சோகை:


வைட்டமின் பி 12 இன் மிக முக்கியமான செயல்பாடு உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதாகும். உடலில் இதன் குறைபாடு இருந்தால், இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, இரத்த சோகையை ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்த சோகை என்பது இரத்தக் குறைபாட்டுடன் தொடர்புடைய மிகவும் தீவிரமான நோயாகும். இது சோர்வு, பலவீனம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | ஆர்வ கோளாறுல அளவுக்கு அதிகமான பாதாம் சாப்பிடாதீங்க... ஆரோக்கியத்திற்கு கேடு


நரம்பியல் பிரச்சினைகள்:


வைட்டமின் பி12 நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. இதன் குறைபாடு மூளை நரம்புகளின் வீக்கம், கூச்ச உணர்வு, உணர்வின்மை, பலவீனம், பலவீனமான நினைவாற்றல் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் சிகிச்சை தொடங்கப்படாமல், வைட்டமின் பி 12 குறைபாட்டை சரி செய்யாவிட்டால், நிலை ஆபத்தாகலாம்.


டிமென்ஷியா


இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்த காலத்தில் வைட்டமின் பி 12 குறைபாடு காரணமாக, இது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இதில், ஒருவருக்கு மறதி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில் அன்றாட விஷயங்களையும் செய்ய முடியாமல் போகிறது. பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது மிக கடினமாக மாறிவிடுகிறது. இந்த மனநோய் அதிகமாக வளர்ந்தால், அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாகலாம்.


வைட்டமின் பி12 குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள் இவைதான்:


- இரத்த சோகை.
- அதிக சோர்வு மற்றும் பலவீனம்
- படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல்.
- கடினமாக உழைப்பதில் சிரமம்
- பசியின்மை.
- இதில் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் காயம் குணமாக நேரம் எடுக்கலாம்.


வைட்டமின் பி12 உள்ள உணவுகள்


- பால் மற்றும் அனைத்து பால் பொருட்கள்.
- கீரை, ப்ரோக்கோலி மற்றும் பச்சை காய்கறிகள்.
- அத்திப்பழம், உலர் திராட்சை போன்ற உலர் பழங்கள்.
- பருப்பு வகைகள்.
- முட்டை, மீன் மற்றும் கோழி போன்ற உணவுகள்


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... தண்ணீர் விட்டான் கிழங்கு என்னும் மூலிகை செய்யும் மாயங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ