ஆப்பிள் ஆரோக்கியமான பழம்தான்... ஆனால், இவர்களுக்கு ஆபத்தாகலாம்!!
Apple Health Benefits and Side Effects: ஆப்பிள் பழத்தில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆப்பிள் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான பல நல்ல பண்புகள் உள்ளன.
Apple Health Benefits and Side Effects: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள் மிக அவசியமானவை. அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள ஆப்பிள் பல வித நற்பண்புகளைக் கொண்டுள்ளது. 'An apple a day, keeps the doctor away' என்று ஒரு கூற்று உள்ளது. அதாவது தினமும் ஒரு ஆப்பிளை உட்கொண்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்று கூறப்படுகின்றது. இந்த கூற்று உண்மைதான். ஆப்பிளில் ஏகப்பட்ட நற்பண்புகள் உள்ளன. இவை உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கின்றன.
ஆப்பிள் பழத்தில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆப்பிளில்ள் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான பல நல்ல பண்புகள் உள்ளன. இவற்றின் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உட்பட பல வித நன்மைகள் ஏற்படுகின்றன.
ஒரு ஆரோக்கியமான நபர் தொடர்ந்து ஆப்பிளை உட்கொண்டு வந்தால், அவர் நோய்வாய்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதாவது அவரது ஆரோக்கியம் மேம்படுகின்றது. ஆனால், அனைத்திலும் நன்மைகளும் உள்ளன, தீமைகளும் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். ஆப்பிளும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆப்பிள் சாப்பிடுவதாலும் நன்மைகளுடன் தீமைகளும் ஏற்படுகின்றன. இது படிப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இது உண்மை!!
ஆப்பிளை சில உடல்நிலைகளில் சிலர் உட்கொள்ளக்கூடாது. ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை என்ன? இதை யார் உட்கொள்ளக்கூடாது? இதை பற்றிய முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
மோசமான செரிமானம்
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்து பொதுவாக செரிமானத்திற்கு மிக சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் ஆப்பிளை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. இதை உட்கொள்வதால் வாயுத்தொல்லை, வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படுகின்றன.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடக்கூடாது. ஆப்பிளில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கும். ஆகையால், நீரிழிவு நோயாளிகள் ஆப்பிளை உட்கொள்ளவதை தவிர்ப்பது நல்லது.
உடல் பருமன்
சில பழங்கள் உடல் பருமனை குறைக்கும், சில பழங்கள் உடல் பருமனை அதிகரிக்கும். ஆப்பிள் பழங்களை உட்கொள்வதால், உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் கலோரி அளவு அதிகமாக உள்ளதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஆகையால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடுவத தவிர்க்கலாம். இதில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வாமை
சிலருக்கு ஆப்பிள் சாப்பிடுவதாலும் ஒவ்வாமை ஏற்படலாம். இப்படிப்பட்டவர்களுக்கு ஆப்பிள் உட்கொண்டவுடன் தோலில் அரிப்பு, சொறி, வீக்கம் ஆகியவை தோன்ற வாய்ப்புள்ளது. ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்பட்டால், உடனடியாக ஆப்பிள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ