பீதியை கிளப்பும் கொரோனா வைரஸ் JN1... அறிகுறிகள் இவை தான்..!!
JN.1 மாறுபாடு, செப்டம்பரில் சுகாதார அதிகாரிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
நாட்டில் ஓமிக்ரானின் துணை வேரியண்ட் எனப்படும் புதிய கொரோனா வைரஸ் JN.1 (New Covid Strain JN.1 ) கண்டறியப்பட்டுள்ளது. வல்லுநர்கள் இந்த வைரஸ் தாக்குதலை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளனர், ஏனெனில் இந்த திரிபு உடலை மிகவும் ஆழமாக பாதிக்கிறது என்பதோடு, இதிலிருந்து மீள அதிக காலம் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது. JN.1 மாறுபாடு, செப்டம்பரில் சுகாதார அதிகாரிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
JN.1 BA.2.86 வகை கொரோனாவான இது பைரோலா ஸ்ட்ரெய்ன் என அழைக்கப்படுகிறது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் இதழில் வெளியான தகவலில், இந்த புதிய திரிபு சோர்வு, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, வாசனை இழப்பு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் அதிகப்படியான இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது. இது, குணமடைய அதிக நேரம் ஆகலாம் மேலும் கடுமையான நோயை ஏற்படுத்தலாம். அதன் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் பிறழ்வுகளால் எளிதில் தொற்றும் திறன் இருக்கலாம். JN.1 வைரல் பரவல் குறித்த வாராந்திர மதிப்பிடப்பட்ட கணக்குகளின் படி, பரவல் விகிதம் 84.2 சதவிகிதம் ஆகும், அதாவது கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்ட மற்ற திரிபுகளை விட இந்த மாறுபாடு வேகமாக பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
NHS வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்ப்டையில், கோவிட் அறிகுறிகள் பின்வருமாறு இருக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்:
1. உடலில் அதிக வெப்பநிலை அல்லது நடுக்கம் - அதிக வெப்பநிலை என்பது உங்கள் மார்பு அல்லது முதுகைத் தொடும் போது நீங்கள் சூடாக உணரும் நிலை (உங்கள் உடலின் வெப்பநிலையை அளவிடத் தேவையில்லை)
2. தொடர்ந்து இருமல் - இது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகமாக இருமல் அல்லது 24 மணி நேரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை இருமல்.
மேலும் படிக்க | சிறுநீர் கடுப்பா இருந்தாலும் சிரிச்சுகிட்டே சரி செய்யலாம்! சீதாபழம் இருக்க கவலை ஏன்?
3. உங்கள் வாசனை அல்லது சுவை திறன் குறைதல் அல்லது பாதிக்கப்படுதல்
4. சுவாசிப்பதில் சிரமம்
5. சோர்வாக உணர்தல்
6. உடலில் வலி
7. தலைவலி
8. தொண்டை வலி
9. மூக்கு அடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
10. பசியின்மை
11. வயிற்றுப்போக்கு
சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்து கூறுகையில், "அறிகுறிகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிற நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். பெரும்பாலான பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் முதல் கோவிட்-19 அறிகுறிகளின் சில நாட்கள் அல்லது வாரங்களில் நன்றாக உணர்கிறார்கள் மற்றும் 12 வாரங்களுக்குள் முழுமையாக குணமடைவார்கள்". எனினும் சிலருக்கு, இது மிகவும் கடுமையான நோயாக இருக்கலாம் மற்றும் அவற்றின் அறிகுறிகள் நீண்ட காலம் நீடிக்கலாம்."
நீங்கள் அறிகுறிகளை அனுபவித்தால் அல்லது பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டால், நீங்கள் ஐந்து நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க முயற்சி செய்ய வேண்டும் மற்றும் முடிந்தவரை மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்க மட்டுமே. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணரை அணுகவும்.)
மேலும் படிக்க | உணவுடன் ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ளவும் எடையை நிர்வகிக்கவும் ஹெல்த் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ