ஒரு மாதம் Pizza சாப்பிடாமல் இருந்தால் இவ்வளவு நன்மைகளா!! ட்ரை பண்ணுங்க மக்களே
Pizza: ஒரு மாதம் பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வட்ஸ் கூறுகிறார். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Pizza: சமீப காலங்களில் மக்களை மயக்கி தன்வயப்படுத்தியுள்ள உணவு வகைகளில் பீட்சாவும் ஒன்று. பீட்சா பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையாக மாறிக் கொண்டு வருகின்றது. அடிப்படையில் பீட்சா இத்தாலி நாட்டின் உணவாகும். ஆனால் கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவில் இதன் பிரபலம் மிக அதிகமாக வளர்ந்து கொண்டு வருகிறது.
பசியே இல்லாத போதும், அனைவரது வயிற்றிலும் பீட்சாவிற்கு சிறிய இடம் இருக்கும் என்றே கூறலாம். ஆனால் பீட்சா சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது பலருக்கு தெரிவதில்லை. ஒரு மாதம் பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வட்ஸ் கூறுகிறார். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஒரு மாதம் பீட்சா சாப்பிடாமல் இருந்தால் கிடைக்கும் நன்மைகள்:
ஆரோக்கியமற்ற உணவில் இருந்து தப்பிக்கலாம்
பீட்சா ஒரு ஆரோக்கியமற்ற உணவாக கருதப்படுகின்றது. இதனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு மாதம் இதை உட்கொள்ளாமல் இருந்தால் ஆரோக்கியமற்ற உணவுகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
உடல் பருமன்
பீட்சாவில் சீஸ் ஆகியவை அதிகமாக இருப்பதால் இதனை உட்கொள்வதால் கலோரிகளின் அளவு அதிகமாகின்றது. இதன் காரணமாக உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது. ஒரு மாதம் பீட்சா உட்கொள்ளாமல் இருந்தால் உடல் எடை விரைவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு
நீண்ட நாட்களுக்கு பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நரம்புகளில் சேர்ந்திருக்கும் கொலஸ்ட்ரால் மெல்ல குறைய தொடங்கும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
பீட்சாவில் இருக்கும் கொழுப்பு காரணமாக இரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படலாம். இதை சாப்பிடுவதை நிறுத்தும் பொழுது இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது
இதய பிரச்சினைகள் நீங்கும்
பீட்சாவில் இருக்கும் மோசொரெல்லா சீஸ் இதய பிரச்சினைகளுக்கான ஆபத்தை அதிகமாக்குகிறது. இதை உட்கொள்ளாமல் இருந்தால் மாரடைபுக்கான்ன ஆபத்தும் குறைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நீரிழிவு நோயின் அபாயம் குறையும்
பீட்சாவில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. இது நீரிழிவு நோய்க்கான அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நீரிழிவு நோய்க்கான ஆபத்து பெரிய அளவில் குறையும்.
செரிமானம் சீராகும்
30 நாட்களுக்கு பீட்சா உட்கொள்ளாமல் இருந்தால் செரிமான அமைப்பு சீராகும். வயிற்று பிரச்சனைகளிலும் நிவாரணம் கிடைக்கும்.
சரிம பாதுகாப்பு
பீட்சா உட்கொள்வதால் சருமத்தில் உள்ள பளபளப்பு குறையத் தொடங்குகிறது. இதனால் சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது. பீட்சா உட்கொள்வதை நிறுத்துனால், சருமத்தின் பொலிவும் அழகும் மீண்டும் வரும்.
சுய கட்டுப்பாடு அதிகரிக்கும்
ஒரு மாதம் பீட்சா உட் கொள்ளாமல் இருப்பதற்கு மிகப்பெரிய மனவலிமை தேவைப்படுகிறது. இப்படி இருந்து விட்டால் சுய கட்டுப்பாடு அதிகரிக்கும். இதன் பிறகு எளிதாக உங்கள் உணவில் இருந்து ஆரோக்கியமற்ற பொருட்களை விலக்க முடியும்.
விழிப்புணர்வு அதிகரிக்கும்
ஒரு மாதத்திற்கு பீட்சா சாப்பிடாமல் இருந்து அதன் மூலம் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை காணும் போது, இதன் மூலம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதற்கான உந்துதலை இது அளிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அளவுக்கு அதிகமானால் வெள்ளரியும் வில்லனாகும்: வெள்ளரிக்காயின் பக்க விளைவுகள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ