குறட்டை வருவதற்கான காரணமும் அதற்கான இயற்கை முறைத் தீர்வும் பல சிக்கல்களை இல்லாததாக்கும்! தூங்கும் போது மூக்கு மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை சப்தம் ஏற்படுகிறது.  ஒருவர் விடும் குறட்டை, அருகில் உள்ளவர்களின் தூக்கத்தைக் கெடுத்து துக்கத்தைக் கொடுக்கிறது.
 
பொதுவாக பருமனாக உள்ளவர்களுக்கு குறட்டை வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே உடல் எடையை குறைப்பது அவசியமாகும். நேராக படுப்பதால் குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பக்கவாட்டில் படுக்கவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும், இது குறட்டையை தவிர்க்கும்.


Also Read | எலும்புகளை வலுவிழக்க செய்யும் விட்டமின் D குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்!


உயரமான தலையணைகளை வைத்து தூங்கினால் சுவாசம் சீராக இருக்கும். புகை பிடித்தால் சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாகுவதோடு, குறட்டைத் தொல்லையும் அதிகரிக்கும். எனவே புகைபிடிப்பதை தவிர்க்கவும்.


தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை தீரும். அதேபோல் இஞ்சி தேநீர் அருந்தினால் அது தொண்டைக்கு இதமளித்து, குறட்டை வருவதைக் குறைக்கும். மது அருந்துவதால் தொண்டை தசைகள் தளர்ந்து குறட்டை ஏற்பட காரணமாகிறது. எனவே மதுவை தவிர்க்கவும்.


இரவு உறங்கச் செல்வதற்கு முன்னதாக ஓரிரு பூண்டு பற்களை சாப்பிட்டு, அதன் பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இரவில் படுக்கும் முன் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை நுகர்ந்து பார்த்தால், இதன் நறுமணம் சுவாசப் பாதையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து குறட்டை பிரச்சனையை போக்கும்.  


Also Read | தேங்காயின் அற்புத நன்மைகள்- கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR