கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டியது, இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 82 ஆயிரம் 170 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், 1,039 பேர் இந்த கொடிய வைரஸால்  இறந்துவிட்டனர் என்றும், சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கோவிட் -19 தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது தான் அனைவருக்கும் உள்ள எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்க இந்தியாவில் இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்பது குறித்த தகவலை சுகாதார அமைச்சர்  தெரிவித்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.


மூன்று தடுப்பூசிகள் தொடர்பான ஆராய்ச்சி இந்தியாவில் நடந்து வருகிறது. சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், 2021 முதல் காலாண்டில், கொரோனா வைரஸ் தடுப்பூசி நாட்டில் கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.


தடுப்பூசியை உருவாக்க ஆராய்ச்சி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் குறைந்தது மூன்று தடுப்பூசிகள் பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. 2021 முதல் காலாண்டில் தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கோவிட் -19 தடுப்பூசி குறித்த ஆன்லைன் போர்ட்டலும் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். எல்லோரும் அந்த போர்ட்டலில் ஆன்லைனில் சென்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தடுப்பூசி தொடர்பான தடுப்பூசி தொடர்பான  தற்போதைய தகவல்களைக் காணலாம் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது என செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ கூறியுள்ளது.



மேலும் படிக்க | Corona Virus Update: புதிய பாதிப்பு 95,542; மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது