புது தில்லி: உடல் எடையை குறைப்பது என்பது எளிதானது அல்ல. இதற்காக உங்களுக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. உணவை சாப்பிடும் போதெல்லாம் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். இந்த கடின உழைப்பைச் செய்தபின், உங்கள் உடல் எடையை எடை இயந்திரத்தில் வைத்து பார்க்கும் போது, அதில் உள்ள வித்தியாசத்தைக் காணும்போது, நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எடையை அளவிடும்போது நீங்கள் எதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்…


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடை இயந்திரத்தில் (Weighing Scales) உங்கள் எடையை அளவிடுவது எளிதல்ல. பல்வேறு வகையான எடை இயந்திரங்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனவே எந்த இயந்திரம் உங்களுக்கு சரியானது. எந்த நேரத்தில் எடையைக் காண வேண்டும் என இதுபோன்ற பல விஷயங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே எடை மஷினில் உங்கள் எடையைப் பார்க்கும்போது, இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.


நீங்கள் எடை இயந்திரத்தில் உடல் எத்தனை கிலோ என்று பார்க்கும் போது, உங்கள் எடை அளவில் குறைந்து இருப்பதை கண்டால், அது படிப்படியாக குறைந்துள்ளதா? ஆலதுஅல்லது ஒரே நாளில் அதிகள் வேறுபாடுகள் தெரிகிறதா? என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் மேல் ஒரு கண் வைத்திருப்பது முக்கியம், 


இதற்காக நீங்கள் தினமும் குறிப்பு எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. நீங்கள் எடை இயந்திரத்தில் ஏறி உங்கள் எடையைப் பார்த்தவுடன், அதை குறித்து வையுங்கள். இதைச் செய்வதன் மூலம், உங்கள் எடை இழப்பு செயல்பாட்டில் சீரான தன்மை பராமரிக்கப்படும். மேலும் நீங்கள் சரியான திசையில் செல்கிறீர்களா இல்லையா என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.


நாள் முடிவில் உங்கள் எடையை சரிபார்ப்பதற்கு பதிலாக, முதலில் காலையில் எழுந்தவுடன் உங்கள் எடையை சரிபார்க்கவும். ஏனென்றால், காலையில் எழுந்தவுடன் உங்கள் உடல் புதியதாக இருக்கும், இரவில் தூங்கியபின், உடல் ஓய்வில் இருக்கும், உடல் ஜீரணிக்க முழு நேரமும் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், காலையில் எழுந்தவுடன் உங்கள் எடையை முதலில் சரிபார்த்தால், துல்லியமான மற்றும் சரியான எடையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


நீங்கள் உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் எடையை தவறாமல் சோதித்துப் பார்ப்பது மிகவும் முக்கியம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு வாரம் அல்லது மாதத்தில் எத்தனை முறை எடை சோதனை செய்ய வேண்டும் என்ற குழப்பம் உங்களுக்கு இருக்குறதா? குழப்பம் வேண்டாம் உங்கள் எடையை வாரத்திற்கு 1 முறை சரிபார்க்கவும். வெவ்வேறு காரணிகளால், உங்கள் எடை ஒவ்வொரு நாளும் உயரக்கூடும். எனவே வாரத்திற்கு ஒரு முறை சோதனை செய்தால் போதும்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.