வெள்ளை முட்டை or பிரவுன் முட்டை... எதை சாப்பிடலாம்?
வெள்ளை முட்டைக்கும், பிரவுன் முட்டைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதை சாப்பிட்டால் ஊட்டச்சத்து அதிகம்? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
வெள்ளை முட்டைக்கும், பிரவுன் முட்டைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதை சாப்பிட்டால் ஊட்டச்சத்து அதிகம்? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
முட்டையின் ஆரோக்கியம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இணையத்தில் உலவும் சில கட்டுக்கதைகளால் மக்கள் சிலர் குழம்பிய்போய்விடுகின்றனர். மேலும், வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை பார்த்து, அதனை உண்மை எனவும் நம்பி, அதனை பிறருக்கும் உண்மைபோல் சொல்லி விடுகின்றனர். அப்படியான ஒன்று தான் வெள்ளை முட்டை, பிரவுன் முட்டை கதையும். உண்மை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
ஊட்டச்சத்து
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் முட்டையில், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்பு, புரதம், கோலைன், பயோட்டின் - வைட்டமின் பி 7, வைட்டமின் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிரம்ப இருக்கின்றன. மூளை நரம்பு வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படும் கோலைன், முட்டையில் அதிகம் இருக்கிறது. கலோரியை பொறுத்தவரை முட்டையில் 72 கலோரியும், 6 கிராம் புரதமும் உள்ளது.
முட்டையில் ஆரோக்கியமான கொழுப்பு அதிகபட்சம் 200 கிராம் வரை உள்ளது. இதனை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், இதயநோய் ஏற்படாது மருத்துவர்களும், நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இதயம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது. நீரிழிவு நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதை தவிர்க்கலாம். சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி முட்டை எடுத்துக் கொள்வது நல்லது.
வெள்ளை முட்டை OR பிரவுன் முட்டை
முட்டையின் மீது இருக்கும் ஓட்டின் கலரை வைத்து வெள்ளை முட்டை மற்றும் பிரவுன் முட்டை என வகைப்படுத்தப்படுகிறது. இந்த கலர்களால் முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகளின் விகிதங்களில் எந்த வித்தியாசமும் இருக்காது. கோழியுடன் இணையும் சேவலைப் பொறுத்து முட்டை ஒட்டின் நிறம் இருக்கும். மேலும், கோழியின் வளர்ச்சி, அது எடுத்துக்கொள்ளும் உணவைப் பொறுத்தும் முட்டையில் இருக்கும் ஓமேகா மற்றும் வைட்டமின் டி ஊட்டச்சத்துகளின் விகிதங்களில் மாறுபாடு இருக்கலாமே தவிர, வேறு எந்த வித்தியாசமும் இருக்க வாய்ப்பில்லை.
எச்சரிக்கை
உடைந்த முட்டைகளை சாப்பிடக்கூடாது என ஹார்வார்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஏனென்றால், கோழியின் மீது இருக்கும் சல்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா முட்டைக்குள் ஊடுருவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறது. இந்த முட்டையை சாப்பிடும்போது, உடல்நலக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், முட்டையை பிரிட்ஜில் வைத்தால் வெப்பநிலை 40*F-க்கு கீழாக இருக்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR