நரை முடியை கருப்பாக மாற்ற இந்த பொருட்களை ஷாம்பூவுடன் கலக்கவும்
இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களும் வெள்ளை முடியால் சிரமப்படுகிறார்கள், இதனால் அவர்கள் மிகவும் சங்கடங்களைச் சந்திக்க நேரிடுகிறது, ஆனால் இந்த வீட்டு வைத்தியம் மூலம், நீங்கள் இயற்கையாகவே கருப்பான முடியை பெறலாம்.
புதுடெல்லி: தற்போது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் அசுத்தமான தண்ணீரால், சிறு வயதிலேயே முடி வெள்ளையாக மாறத் துவங்குகிறது.குறிப்பாக பெண்கள் இந்த பிரச்சனையை சமாளிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் தலைமுடி வெள்ளையாக மாறுவதைத் தடுக்கும் அத்தகைய ஆயுர்வேத முறையைத்தான் இன்று நாம் காண உள்ளோம். அதன்படி ஷாம்பூவை மிக்ஸ் செய்து பலன் தரும் இது போன்ற விஷயங்களைப் பற்றித்தான் நாம் தெரிந்து கொள்வோம்.
ஷாம்பூவுடன் மூலிகை தண்ணீரை கலக்கவும்
தேவையான பொருள்
- 2 தேக்கரண்டி தேயிலை இலைகள்
- 2 தேக்கரண்டி வெந்தயம் விதைகள்
- 2 தேக்கரண்டி நெல்லிக்காய் தூள்
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்த வழியில் ஹெர்ப்ஸ் வாட்டர் தயார் செய்யவும்
இதற்கு, ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை எடுத்து, அதை சூடாக்கவும். இப்போது எல்லா பொருட்களையும் இந்த தண்ணீரில் போடவும். இந்த தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை குறைந்த தீயில் கலக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கேஸ் ஐ அணைத்து, இந்த தண்ணீரை குளிர்விக்க வைக்கவும். ஆறியதும் வடிகட்டி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஷாம்பூவுடன் எப்படி பயன்படுத்துவது?
தலையை கழுவும் போது ஷாம்பூவை நேரடியாக கூந்தலில் தடவாதீர்கள். ஒரு பாத்திரத்தில் ஷாம்பூவை எடுக்கவும். இப்போது அதனுடன் அரை கப் மூலிகை தண்ணீர் சேர்த்து, பிறகு ஷாம்பு செய்யவும். உங்கள் தலைமுடியை வாரத்திற்கு 2-3 முறை ஷாம்பு செய்தால் இந்த தண்ணீரைப் பயன்படுத்தவும். இதனால் உங்கள் தலைமுடி வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR