நம்மில் பெரும்பாலானோரும் வழக்காமாக குடிக்கும் பால் சேர்த்த டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ குடித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எப்போதாவது ஒயிட் டீயை அருந்தியிருக்கிறீர்களா? இது பொதுவாக கேள்விப்படாத தேநீர். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.  உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி செய்கிறீர்கள் என்றால், இந்த டீ உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதனுடன், இந்த மூலிகை டீயைக் குடிப்பதன் மூலம், முகத்தில் ஏற்படும் சுருக்கமும் படிப்படியாக மறைந்துவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

White Tea என்னும் வெள்ளை தேநீர் என்பதும் தேயிலையிலிருந்து பெறக்கூடியவை தான். இது குறைவான அளவில் பதப்படுத்தப்பட்ட டீ வகையாகும். தேயிலை செடியின் மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதும் விரிவதற்கு முன்பு பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த மொட்டுகள் மீது சிறிய வெள்ளை முடிகள் இருப்பதால், இது வெள்ளை டீ என்னும் பெயரை பெற்றுள்ளது.


வெள்ளை டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்


வெள்ளை டீயில் உள்ள  ஊட்டச்சத்துக்கள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதில் பாலிபினால்கள், பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் பல வகையான கேட்டசின்கள் உள்ளன. இது தவிர, வெள்ளை தேநீரில் டானின்கள், ஃப்ளோரைடு மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன.  நுண்ணுயிர் எதிர்ப்பி தன்மை இதில் காணப்படுகிறது, இதனால் பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. க்ரீன் டீயை விட வெள்ளை டீயில் 20 முதல் 30 % வரை உயர் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை கொண்டது. அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை அழித்து, செல்களை புதுப்பிக்கிறது. இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்பதோடு, முக்கியனாக முதுமையை போக்கும்.


ஒயிட் டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்


தில்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ், ஒயிட் டீ குடிப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று ZEE NEWS உடன் பேசுகையில் கூறினார்.


1. உடல் எடையை குறைக்க க்ரீன் டீ கண்டிப்பாக குடிக்க வேண்டும் தான், ஆனால் ஒயிட் டீயை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். அதைக் குடித்த பிறகு, அதிக பசி எடுப்பதில்லை, இது எடை இழக்கத் தொடங்குகிறது.


2. ஒயிட் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதன் உதவியுடன் உடலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் மறைந்துவிடும்.


மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


3. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை மறையச் செய்யும் வெள்ளை டீயில் முதுமை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.


4. முகத்தில் தோல் தொங்கத் தொடங்கும் நபர்கள், தொடர்ந்து ஒயிட் டீ குடித்து வந்தால், முகம் இளமையாக இருக்கும்.


5. காலையில் ஒயிட் டீ குடித்து வந்தால், நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்து இருக்கும்.


6. ஒயிட் டீ குடிப்பதால் புத்துணர்ச்சி அடைவதோடு சோர்வு நீங்கும்.


7. ஒயிட் டீ குடிப்பதால், இனிப்பு சாப்பிடும் நாட்டம் குறையும், இது உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.


8. அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக ஒயிட் டீயை அருந்தினால், மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை குணமாகும்.


9. ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் பாலிபினால்கள் வெள்ளை தேநீரில் காணப்படுகின்றன.


10. ஒயிட் டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இது தொற்றுநோயைத் தடுக்கிறது.


11. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் ஒயிட் டீ குடிக்க வேண்டும்.


12. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ