உணவுகளில் பிரதான இடம் பிடித்திருப்பது வெங்காயங்கள் தான். உணவு சுவைக்காக வெங்காயம் நம் ஊர்களில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு நாளும் வெங்காயம் வெட்டும் போது கண் எரிச்சல் அடைகிறது, கண்ணீர் வருகிறது இது நம் அனைவரும் தெரியும். இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?


வெங்காயத்தில் வெட்டும்போது தண்ணீர் வரக் காரணம் அவற்றில் காணப்படும் சல்பெனிக் அமிலம் திரவ வடிவில் இருக்கும் சல்பெனிக் அமிலமானது வெங்காயம் வெட்டும்போது காற்றுடம் கலந்து ஆவியாக மாறுகிறது. எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து விடுகிறது. 


இதில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகியன உள்ளன. வெங்காயத்துக்கு பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு.