இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு என்பது ஒரு பொதுவான நோயாகும், மேலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஆய்வு ஒன்றில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. உணவுடன் மது அருந்துவது ஓரளவுக்கு நன்மை பயக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீருக்கு பதிலாக ஒயின் குடிக்கலாம்


சமீபத்திய ஆய்வில், உணவுடன் ஒயின் குடிப்பதால் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது என்று தெரியவந்துள்ளது.விஞ்ஞானிகள் குழு நடத்திய பல வருட ஆராய்ச்சியில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. மது அருந்துதல் மற்றும் நீரிழிவு அபாயம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உணவுடன் மது அருந்த விரும்பினால், பீர் அல்லது ஆல்கஹால் அருந்துவதற்கு பதிலாக, உணவுடன் ஒயின் உட்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான பெண்களிடம் நடத்திய ஆய்வு


ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் UK Biobank-ல் சுமார் 312,400 வயது வந்தவர்கள் தொடர்பான தரவுகளை சேகரித்தனர். இதில் தினமும் மது பானம் அருந்துவோரும் அடங்குவர். ஆய்வில் சேர்க்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் எதுவும் இல்லை. இந்த ஆய்வில் நோய் காரணமாக குடிப்பழக்கத்தை கைவிட்ட எந்த நபரும் சேர்க்கப்படவில்லை. கர்ப்பிணிப் பெண்களும் இதில் சேர்க்கப்படவில்லை. இந்த ஆய்வில் ஈடுபட்ட அனைவரின் சராசரி வயது 56 ஆண்டுகள்.  ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.


மேலும் படிக்க | பாலியல் பிரச்சனைக்கு வயாகரா தேவையில்லை; மாதுளையே போதும்..!!


11 ஆண்டுகள் நீடித்த ஆய்வு


சுமார் 11 ஆண்டுகள் நீடித்த இந்த ஆய்வில், சுமார் 8,600 பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் 2.75% அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. உணவுடன் ஒயின் அருந்துபவர்களில் டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து 14% குறைவதாகக் கண்டறியப்பட்டது.  எனினும் பீர் மற்றும் ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


குறைந்த அளவு ஒயின் உட்கொள்வது ஆபத்தை குறைக்கலாம்


நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழக உடல் பருமன் ஆராய்ச்சி மையத்தின் உயிரியல் புள்ளியியல் ஆய்வாளரும் ஆய்வு ஆசிரியருமான ஹாவ் மா, ஒரு செய்திக்குறிப்பில், இந்த ஆய்வின் மூலம் குறைந்த அளவு ஒயின் குடிப்பது டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது என்று கூறினார். எனினும், உங்களுக்கு எந்த விதமான நோயும் இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம். வேறு சில வகையான நோய்களில், ஒயின் உட்கொள்வது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துக் கூடும். இந்த ஆய்வில் வெள்ளையர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர், என்பதால், அதன் முடிவுகள் மற்றவர்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம்.


கர்ப்பிணி பெண்கள்,நோயாளிகள், ஒயினில் இருந்து விலகி  இருக்க வேண்டும்


கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆய்வில் சேர்க்கப்படவில்லை. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தீவிர நோயாளிகள்  ஒயின், ஆல்கஹால் அல்லது பீர் போன்ற அனைத்து வகை மதுபானங்களிடம் இருந்தும் விலகி இருக்குமாறு ஆராய்ச்சி குழுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR