உணவே மருந்தாகும் என்பது பழமொழியாக இருந்தாலும் அது உண்மையான மொழி. என்றென்றும் நீடித்து நிலைக்கும் சத்திய மொழி. மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் அருமருந்து கொத்தவரங்காய்.
 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்ட கொத்தவரங்காய், உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது. மூட்டு வலியை சரி செய்கிறது. அதுமட்டுமா? அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது, ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதய நோய் வராமல் தடுக்கும் கொத்தவரங்காய், ஆஸ்துமா விற்கு நல்ல மருந்து. சிறந்த கிருமி நாசினி மட்டுமல்ல, நல்ல வலி நிவாரணி, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.அதுமட்டுமல்ல, கொத்தவரங்காயை கர்ப்பிணி பெண் வாரத்தில் இரு முறை சாப்பிட்டு வந்தால், கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.  


Also Read | Cooking Tips of Amla: நெல்லிக்காய் சாதம், நெல்லிப் பச்சடி செய்வது சுலபம் தெரியுமா?


குழந்தைகளின் எழும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு கொத்தவரங்காய் நல்லது. உடல் எடையை குறைக்க தேவையான வேதியல் பண்புகள் கொத்தவரங்காயில் இருக்கிறது என்பது இதன் சிறப்பம்சம். 


ஒவ்வாமையை போக்கவல்ல கொத்தவரங்காய், மன அழுத்தத்தை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது. சரும பிரச்சினையை தீர்க்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது, ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். 


கொத்தவரங்காயின் நன்மைகளின் பட்டியலில் இன்னும் சில முக்கியமான பண்புகளை தெரிந்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது கொத்தரவரங்காயை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். ஐன்னி கண்டவர்களுக்கு கொடுக்க உகந்த காய், கொத்தவரங்காய். 


Also Read | Benefits of Horse Gram: கொள்ளுப் பயறின் சூப்பர் நன்மைகள் தெரியுமா? உடல் பருமனை குறைக்கும் அருமருந்து…


அம்மை நோயை மூன்று நாட்களில் சரி செய்யும் ஆற்றலும் கொத்தவரங்காயில் இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, கொரோனா நோயை விரைவில் குணப்படுத்த நல்ல மருந்தாக செயல்படுகிறது கொத்தவரங்காய். சரி, இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருக்கும் கொத்தவரங்காயில் 
இருக்கும் சத்துக்கள் என்ன தெரியுமா? 


கொத்தவரங்காயில் விட்டமின்ன் கே, போலிக் ஆசிட்,  நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து என இருவகை நார்ச்சத்துக்களும் இருக்கிறது. இரும்பு சத்து, கால்சியம், சுண்ணாம்புச்சத்து மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும்  கிளைக்கோநியூட்டிரியன்ட் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.


ஆன்டி-ஆக்ஸிடன்ட், புரதச்சத்து என ஊட்டசத்துக்களின் புதையலை தன்னகத்தே கொண்டுள்ளது கொத்தவரங்காய். இத்தனை உயிர் சத்துக்களை கொண்டிருந்தாலும், இதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. அதனால் தான் கொத்தவரங்காயின் விலை மிகவும் குறைவாக உள்ளது.


Also Read | உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR