முத்துப் போல் பற்கள் ஜொலிக்கணுமா? இந்த பேஸ்ட் யூஸ் பண்ணுங்க
Home remedy: இங்கே குறிப்பிட்டுள்ள ஹோம் மேட் பேஸ்ட்டைப் பயன்படுத்தத் தொடங்குங்கள், பிறகு 1 மாதத்திற்குள் உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க ஆரம்பிக்கும்.
பற்களை வெண்மையாக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்: உங்கள் பற்களில் சில நாட்களுக்கு மஞ்சள் அடுக்கு குவிய ஆரம்பித்திருந்தால், ஆரம்பத்திலேயே அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், பற்களின் வெண்மையைப் பெற நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவெ இங்கே குறிப்பிட்டுள்ள ஹோம் மேட் பேஸ்ட்டைப் பயன்படுத்தத் தொடங்குங்கள், பிறகு 1 மாதத்திற்குள் உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க ஆரம்பிக்கும். எனவே தாமதமின்றி, அந்த பயனுள்ள தீர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் நிற பற்களை போக்க வீட்டு வைத்தியம்
- உங்கள் பற்கள் மிகவும் மஞ்சள் நிறமாக இருந்தால், தேங்காய் எண்ணெயை உங்கள் பற்களில் தடவி சிறிது நேரம் வைத்திருங்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனைத் தரும். அதேபோல் இரவில் ஆரஞ்சு தோலை பற்களில் தேய்க்கலாம். இதன் மூலம், உங்கள் வாயில் உள்ள துர்நாற்றம் மறைந்து, பற்களில் உள்ள அழுக்குகள் சுத்தமாகும்.
மேலும் படிக்க | இந்த காயை வாரத்தில ரெண்டு நாள் சாப்பிட்டா, புற்றுநோய் வராது! நோய்க்கு எதிரி பழுபாகல்
- ஒரு டீஸ்பூன் உப்பில் எலுமிச்சை சாறு மற்றும் கடுகு எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது நீங்கள் தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டின் உதவியுடன் 3 நாட்களுக்கு பற்களை துலக்கவும். இந்த செய்முறையானது பற்களில் உள்ள மஞ்சள் அடுக்கை பெருமளவு குறைக்க உதவும்.
- மறுபுறம், பற்களின் மஞ்சள் நிறத்தைக் குறைக்க வேப்பங்குச்சி மிகவும் உதவியாக இருக்கும். கெமிக்கல் நிறைந்து பேஸ்ட் வைத்து பற்களை துலக்குவதற்குப் பதிலாக, இந்த வேப்பங்குச்சி பயன்படுத்தி பல் துலக்கத் தொடங்குங்கள், பின்னர் உங்கள் வாய்வழி ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்பதைப் பாருங்கள்.
- மஞ்சள் பற்களைப் போக்க, ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதை பிரஷில் போட்டு பற்களை சுத்தம் செய்தால், பற்கள் வெண்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
- மேற்பரப்பு கறைகளை அகற்ற கல் உப்பு ஒரு துப்புரவு முகவராக இருக்கலாம். உங்கள் வழக்கமான பேஸ்ட்டில் ஒரு சிட்டிகை கல் உப்பைத் தூவி, பல் துலக்க அதைப் பயன்படுத்துங்கள். கல் உப்பைக் கொண்டு தொடர்ந்து துலக்குவது பற்களை வெண்மையாக்க சிறந்த வழியாகும்.
- பற்களை வெண்மையாக்க எலுமிச்சைச் சாறு மற்றும் அதன் தோலைப் பயன்படுத்தலாம். அவற்றில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் உள்ளது, அதன் ப்ளீச்சிங் விளைவு பற்களை சுத்தம் செய்கிறது. எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இது பற்களில் படிந்திருக்கும் பிளேக்கையும் குறைக்கிறது. நீங்கள் எலுமிச்சை தோலை மஞ்சள் பற்களில் தேய்க்கலாம் அல்லது அதன் சாற்றை விரல்களின் உதவியுடன் பற்களில் தடவலாம்.
- பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்கும் ஒரு இயற்கை மூலப்பொருள். பேக்கிங் சோடாவால் செய்யப்பட்ட பேஸ்ட் பற்களை வெண்மையாக்குவதற்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக இருக்கும். ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை தயார் செய்து, அதன் மூலம் பல் துலக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பை கரைந்து உடல் எடை குறைய... இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ