பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை ஒற்றைத் தலைவலி . ஒற்றைத் தலைவலி அதிகம் இருக்கும் போது, சில சமயங்களில், குமட்டல் வாந்தியும் ஏற்படும். ஒலி மற்றும் வெளிச்சத்தை கூட சகித்துக் கொள்ள முடியாத நிலை இருக்கும். ஒற்றை தலைவலியை போக்க உதவும் சில உணவுகள் குறித்து மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒற்றை தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட, மெக்னீசியம் சத்து அதிகமாக உள்ள உணவுகள் பலன் அளிக்கும். அதோடு, மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளபடி சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஒற்றைத் தலைவலி பிரச்சனையை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


ஒன்றை தலைவலியை போக்க உதவும் உணவுகள்:


கொட்டை வகைகள்: ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் முந்திரி போன்றவை மெக்னீசியம் நிறைந்தவை. மெக்னீசியம் நிறைந்த உணவு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், ஒற்றைத் தலைவலி பிரச்சனை படிப்படியாக குறையும்.


ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்


மூலிகை தேநீர்: உடலுக்கு நீர்சத்து கொடுக்கும் எதுவும் ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பல்வேறு வகையான மூலிகை தேநீர் சுவையில் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல நன்மை பயக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக, இஞ்சி கலந்த லெமன் டீ மிகவும் பயனளிக்கும். புதினா இலை சேர்த்த தேநீர் சைனஸ் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால், தலைவலி குறைகிறது.


பழங்கள் மற்றும் காய்கறிகள்:  உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கின்றன. இதன் மூலம், உங்கள் செல்கள் அனைத்து விதமான நோய் மற்றும் வலியையும் எதிர்த்துப் போராடும் திறனை பெறுகிறது.


தயிர்: பல நேரங்களில், வயிறு தொடர்பான பிரச்சனைகளால் ஒற்றைத் தலைவலி, ஏற்படுகிறது. தயிர் வயிற்றுப் பிரச்சினைகளை நீக்குகிறது. மேலும், இது நீரிழப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


மீன் உணவுகள்: கடல் மீனில் போதுமான அளவு ஒமேகா 3 உள்ளது. இது உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கடல் உணவில், குறிப்பாக மீன் உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது ஒற்றை தலைவலியைக் குறைக்கிறது.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR