கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் ‘Zink’ குறைப்பாடு; அலட்சியம் வேண்டாம்!
துத்தநாகம் என்பது நம் உடலுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு கனிமமாகும், அதன் குறைபாடு, மன ஆரோக்கியம், கருவுறுதலில் பிரச்சனை கண் பார்வை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
துத்தநாகக் குறைபாடு : நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு சத்தின் குறைபாடு இருந்தால் கூட, ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இவற்றில் ஒன்று துத்தநாகம். துத்தநாகம் உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு தேவைபடுகிறது. நீங்கள் உடலுக்கு போதுமான அளவு துத்தநாகத்தை பெற வேண்டும். துத்தநாக பற்றாக்குறை மரபணு கோளாறுகள், அசாதாரண வளர்ச்சி, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே கருவுறுதல் பிரச்சனைகள் போன்ற பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கிறது. துத்தநாக குறைபாடு முழுமையான பார்வை அல்லது பகுதி நேர பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். அதாவது மாலைக்கண் நோய் போன்ற நிலையை உண்டாக்கலாம்.
துத்தநாக சத்தின் காரணமாக உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதாவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, காயங்களைக் குணப்படுத்துதல் போன்றவை. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், துத்தநாகக் குறைபாட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன, இந்தத் தேவையை நிறைவேற்ற நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று கூறினார்.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
துத்தநாக சத்து நிறைந்த (Zinc Rich Foods) உணவுகள்:
1. முட்டையின் மஞ்சள் கரு
முட்டையை நாம் அடிக்கடி காலை உணவில் உட்கொள்கிறோம், ஆனால் குறிப்பாக ஜிம்மிற்கு செல்பவர்கள் அதன் மஞ்சள் பாகத்தை அதாவது மஞ்சள் கருவை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள், ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகம் நிறைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர வைட்டமின் பி12, தயாமின், வைட்டமின் பி6, ஃபோலேட், பாந்தெனோனிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் இதில் காணப்படுகின்றன.
2. பூண்டு
பூண்டு இந்திய வீடுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருளாகும். இதில் துத்தநாகம் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், அயோடின், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் காணப்படுகின்றன.
3. தர்பூசணி விதைகள்
பொதுவாக நாம் தர்பூசணியை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுகிறோம், ஆனால் இந்த பழத்தின் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுவோம், ஆனால் அதன் நன்மைகள் உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்கள். இந்த பழத்தின் விதைகளில் நிறைய துத்தநாகம் உள்ளது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் பராமரிக்கப்படுகிறது. இதற்கு தர்பூசணி விதைகளை கழுவி வெயிலில் காயவைத்து உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
துத்தநாகக் குறைபாடு இருக்கும்போது, உடல் தோன்றும் அறிகுறிகள்
- எடை இழப்பு
- காயங்களை தாமதமாக குணமடைதல்
- அடிக்கடி வயிற்றுப்போக்கு
- பசியிழப்பு
- மன ஆரோக்கியத்தில் தாக்கம்
- மிகவும் பலவீனமாக உணர்தல்
- முடி உதிர்தல்
- சுவை மற்றும் வாசனை உணர்வு இழப்பு
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ