#CWG_2018: 11-வது தங்க பதக்கத்தை வென்றார் ஹீனா சித்து!
மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றார்....!
கோல்டுகோஸ்ட்: 21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
காமன் வெல்த் விளையாட்டில், மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம், காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்கள் கிடைத்துள்ளது...!