தேவராட்டம் திரைப்படத்தின் கதாநாயகியின் பெயர் வெளியானது!
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘தேவராட்டம்’, இப்படத்தில் மகிமா மோகன் முதன்மை வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘தேவராட்டம்’, இப்படத்தில் மகிமா மோகன் முதன்மை வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ ஆகிய குடும்பப் படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் முத்தையா இயக்கும் படம் ‘தேவராட்டம்’ . கெளதம் கார்த்திக், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தில் மகிமா மோகன் முதன்மை கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தகது.
இயக்குனர் முத்தையா படங்களில் சாதி பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைத் தலைப்பாக வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் முத்தையாவின் படங்களில் பாசத்திற்கு என்றும் பஞ்சம் இருக்காது என்பதால், குடும்ப பாங்கான படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் பெரும் விருந்தாய் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.