உலகையே உலுக்கிய ஹிட்லரின் நினைவு தினம் இன்று!!
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தவை!
வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர் ஆவார்.
குடும்ப வறுமை காரணமாக பிழைக்க வழி தேடி ஓவியராகும் எண்ணத்தில் வீட்டை விட்டு ஜெர்மனிக்கு வந்தடைந்தார்.
பின்னர் கனவு நிறைவேறாததால் தன்னுடைய 25-வது வயதில் ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார்.
முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது. பின்னர், 1920, பிப்ரவரி 29-ம் தேதி ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார்.
அவர், 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.
பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார்.
ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
பின்னர், ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன.
இதன் மூலம், உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ஹிட்லர்.
யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்த பின்னர், ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50 லட்சம் ஆகும்.
பின்னர், தொடர்ந்து ஆட்சியில் இருந்த போது இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.
அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று தனது கைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன.
அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
ஹிட்லர் பதவியேற்ற 1933ல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 60 லட்சம் ஆகும்.
ஆனால் 1936 ல், அதாவது 3 ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது குறிப்பிடத்தக்கவை.