காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 


ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 


இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துறை செய்தது. மேலும் இந்த மனுவினை மே 3 விசாரணையின் போது விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று (மே-3) காவிரி நதிநீர் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது அடுத்த. நேற்று மத்திய அரசு காவிரி விவகாரம் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என நேற்று மனுதாக்கல் செய்ததது. இந்த மனுவினை நேற்ற உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் கெடு இன்றோடு நிரைவடையும் நிலையில், இந்த விசாரணையின் போது மத்திய அரசு வரைவுத்திட்டத்தினை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. மாறாக மேலும் அவகாசம் கோரியுள்ளது!


கர்நாட்டக தேர்தலுக்கு பிறகு வரைவு திட்டத்தினை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4-TMC தண்ணீர் வழங்கவேண்டும் என கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா:- எங்களுக்கே தண்ணீர் இல்லை. இதில் எப்படி நாங்கள் காவிரி நீரை தமிழகதிற்கு திறந்துவிட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காவிரி நீரை தமிழகத்துக்கு திறப்பது பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.