பெண் செய்தியாளரின் அழகை வர்ணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைக்குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்ச்சையைக் கூறிய சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் கூறியதாவது:-


அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர சகோதரியாகவே நான் பார்க்கிறேன். அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன்; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.



 


முன்னதாக, நேற்று (வியாழக்கிழமை) இரவு அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்றார் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். கூட்டம் முடிந்து வெளியவந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம், பெண் செய்தியாளர் ஒருவர் மைக்கை நீட்டி, கூட்டத்தில் என்ன பேசப்பட்டது, என்ன தீர்மானங்கள் போடப்பட்டது என்று கோட்டுகொண்டு அவரை பின்தொடர்ந்து சென்றார். ஆனால் பெண் செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர், உங்கள் கண்ணாடி அழகாக இருக்கிறது என்று கூறுகிறார். 


அதற்கு பெண் செய்தியாளர் "இந்த கண்ணாடியை நான் எப்பவும் போட்டுதான் இருக்கிறேன் என்று கூறிக்கொண்டே, மீண்டும் அமைச்சரிடம், சார் இன்னைக்கு கூட்டத்தில் என்ன பேசப்பட்டது எனக் கேட்கிறார். ஆனால் அமைச்சர் மீண்டும் மீண்டும் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க.. இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க.. இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க கூறிக்கொண்டே செல்கிறார்.  


ஆனால் அமைச்சரின் கிண்டலை போருத்படுத்தாமல், சார் கூட்டத்தில் என்ன நடந்தது எனக் கேட்கிறார். அதற்க்கு அமைச்சர் அறிக்கை வெளியிடப்படும், அப்பொழுது தெரிந்துவிடும் என்ன ஆலோசனை செய்யப்பட்டது என்று கூறினார்.


சர்ச்சை!! பெண் செய்தியாளரை வர்ணித்த அமைச்சர் சி. விஜயபாஸ்கர்


மீண்டும் செய்தியாளர்கள் "அவரிடம் ஆலோசனை கூட்டத்தை பற்றி கேட்கிறார்கள். அதற்கு மூத்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவார்கள் எனக் கூறியதோடு, மீண்டும் பெண் செய்தியாளரை பார்த்து "அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க.. என்று மூன்று முறை கூறுகிறார்.


தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பெண் செய்தியாளரை பார்த்து இவ்வாறு கூறுவதை, அமைச்சருடன் இருந்த மற்ற அதிகாரிகள் சிரிக்கிறார்கள். இச்சம்பவம், முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தயது.