நோயாளிகளுக்கு பதிலாக பொருட்களை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ்!
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பதிலாக பொருட்களை எடுத்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவை!
உ.பி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெயின்ட் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் நோயாளிகளுக்கு பதில் வாகனம் ஒன்று பெயின்ட் டப்பா, கயிறு, பைப் போன்ற வன்பொருட்களை ஏற்றிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் ஆம்புலன்சில் பழுது இருந்ததால் இதன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியாமல் வாகனத்தில் வன்பொருள் ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் தராததால் இறந்தவரின் சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றி சென்றதும், ஆம்புலன்ஸ் வழங்காததால் வரும் வழியிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.