புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் பாதலி காவல் நிலைய பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் இறந்தார், மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமக்கு கிட்டித்தகிடைத்த தகவல்களின்படி, காயமடைந்தவர்கள் அம்பேத்கர் மருத்துவமனை மற்றும் பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் முதல் தளத்தில் 2 கடைகள் இருந்தன. இரண்டாவது மாடியில் ஒரு குடும்பம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 


சம்பவம் குறித்து தகவலை அறிந்த டெல்லி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளைத் மேற்கொண்டனர். இடுபாடுகளில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் இறந்த பெண்ணின் வயது 19 எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.