பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாப பாலி; 30 பேர் காயம்!
மத்திய பிரதேசத்தின் ரேவாவில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாப பாலி, 30 பேர் காயமடைந்தனர்!
மத்திய பிரதேசத்தின் ரேவாவில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாப பாலி, 30 பேர் காயமடைந்தனர்!
டெல்லி: மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று லாரி மீது மோதிய விபத்தில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை பேருந்து ரேவாவிலிருந்து சித்திக்கு சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று அதன் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்து இன்று காலை 6 மணிக்கு நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து மீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இச்சம்பவத்தை கேள்விப்பாட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ரேவாவின் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட சுமார், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இறப்புக்கள் மேலும் அதிகாரிக்கும் என அஞ்சப்படுகிறது.