டெல்லியில் ராணி ஜான்சி சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலியானதாக டெல்லி போலீஸ் தகவல்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: டெல்லி ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்டவர்கலை டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தீவிபத்தை கட்டுப்படுத்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஆதாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 



ஜீ நியூஸுடன் பேசிய டெல்லி தீயணைப்பு சேவையின் தலைமை தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க், மூச்சுத்திணறல் காரணமாக சிலர் உயிர் இழந்துள்ளனர் என்று கூறினார். மேலும் சிலர் கட்டிடத்திற்குள் இன்னும் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்பவர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார். அவர் தீ அணைத்துள்ளார் என்று குறிப்பிட்டார். சிலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நகரத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கார்க் கூறினார். மீட்கப்பட்டவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.