ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினம்- அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பிரிட்டன் தூதர் டோமினிக் மரியாதை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் என்ற இடத்தில் கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரியின் உத்தரவின் படி, 50 சிப்பாய்களால் நிகழ்த்தப்பட்ட பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூடு நிகழ்வு 'ஜாலியன் வாலாபாக் படுகொலை' என வரலாற்றில் கறுப்பு பக்கமாக பதிவாகி உள்ளது.


இந்நிகழ்வில், எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படாமல் பெண்கள், சிறுவர்கள் உட்பட, ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். 10 நிமிடங்கள், இடைவிடாமல் நீடித்த இந்த தாக்குதலில், 1,650 தோட்டாக்கள் சீறி பாய்ந்தன. அதாவது, ஒரு சிப்பாய்க்கு 33 'ரவுண்டு'கள் என்ற முறையில் சுட்டனர். இதில், '379 பேர் இறந்தனர்' என, பிரிட்டிஷ் அரசு தெரிவித்தது. காந்தி அமைத்த இந்தியக் சூழு கணக்கெடுப்பின் படி, 1,000 பேர் கொல்லப்பட்டனர்.


இந்த சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த சம்பவத்தின் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி இந்திய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  “ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.  நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஜாலியன் வாலாபாக் படுகொலை  நடைபெற்று இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது’ என்று பதிவிட்டுள்ளார்.




ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-ஆவது ஆண்டு நினைவுதினத்தையொட்டி நினைவிடத்தில் இங்கிலாந்து அதிகாரிகள் மரியாதை செலுத்தினார்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பிரிட்டன் தூதர் டோமினிக் உள்ளிட்ட இங்கிலாந்து அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.