ஆக்ராவில் குரங்கு தாக்கியதில் பிறந்து 12 நாட்களே ஆனா பட்சிலம்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் மொஹல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன சன்னி என்ற பட்சிலம் குழந்தையை அவரது தாய் மடியில் வைத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு திடீர் என வந்த குரங்கு ஒன்று மடியில் இருந்த குழந்தையை எடுத்துகொண்டு ஓடியுள்ளது. 


இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் குழந்தையை தேடி சென்றுள்ளனர். இதையடுத்து அந்த குழந்தை பக்கத்து வீட்டின் முகப்பு பகுதியில், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதை தொடர்ந்து, குழந்தையை பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். ஆனால், குழந்தை இறந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி சுற்றுசூழல் ஆர்வலர் சரவண குமார் கூறும்பொழுது, குரங்குகளின் வாழ்விடங்கள் அழியும்பொழுது மற்றும் பசுமை சூழல் நிலையாக குறைந்து வரும்பொழுது அவை ஆத்திரமடைகின்றன என கூறினார்.


இந்த சம்பவம் குறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில், ஆக்ரா நகரில் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை தாக்குவதுடன், அவர்களிடம் இருந்து பொருட்கள் மற்றும் கிடைப்பவற்றை குரங்குகள் பறித்து கொண்டு சென்று விடுகின்றன என தெரிவித்துள்ளனர்.