பிஹார்: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு கோளாறு காரணமாக 120 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஹாரின் லக்ஷிராய் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை உண்ட 120 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


லக்ஷிராய் மாவட்டத்தின் பாரய்யா பகுதியில் இருக்கும் ஜவகர் நவோதையா பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு நேற்றைய தினம் வழங்கப்பட்ட உணவை உண்ட மாணவர்கள், நேற்று இரவு தங்களுக்கு வயிறு உவாதை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். சிலர் வாந்தி போன்ற பிரச்சனையாளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


குறிப்பிட்ட உணவு வேலையில் மாணவர்களுக்கு பன்னீர் கரி மற்றும் சாதம் வழங்கப்பட்டதாக காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் சர்மா தெரிவித்துள்ளார். உணவு உண்ட மாணவர்கள் தங்களின் பிரச்சணையினை விடுதி நிற்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து 70 மாணவர்கள் அருகில் இருக்கும் பாரய்யா சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலான மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என தெரிவித்துள்ளனர்.


இந்த விஷயம் குறித்து விசாரணை மேற்கொள்ள இன்று காலை நவோதையா பள்ளிக்கு மாவட்ட நீதவான் சோபேந்திர குமார் சௌத்ரி சென்றுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து அடுத்த 3 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.