125 கோடி இந்தியர்கள் என் உயிர் மூச்சு: பிரதமர் மோடி!
சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் மோடி குஜராத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்.
இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், 33 மாவட்டங்கள், 182 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலதிற்கு வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதில்,முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும்-இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்றும் -இன்றும் 30-க்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று காலை குஜராத் மாநிலத்துக்கு வந்த அவர் நன்பகல் வரை கட்ச் மற்றும் பரூச் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அவருடைய பயண திட்டம் சுமார் 30 பொதுகூட்டங்களில் பங்கேற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இன்றும் பிரதமர் மோடி வல்சாத் தர்மபுரயம் என்ற இடத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்;-காங்கிரசின்ஆட்சியில் இருக்கும் போது சட்டம் ஒழுங்கு, வன்முறை,சீர்கேடு,வறுமை,போன்றவை மேலோங்கி காணப்பட்டது நினைவில் இருக்கிறதா? என்றும் பா.ஜ.க. மாறியது மட்டுமல்லாமல், குஜராத் முழுவதிலும் ஒரு மாற்றம் ஏற்ப்பட்டது. என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனுத்தாக்கல் நேற்று செய்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன்.காங்கிரஸ் போன்ற மதச்சார்புடைய தவறான தலைவர்களை குஜராத் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள் என்றும் சுட்டி காட்டியுள்ளார்.
மேலும் அவர்,முஸ்லிம்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் போன்ற தவறான தகவல்கள் மக்களிடையே பரவி வருகிறது. ஆனால் குஜராத் மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். இது போன்ற தவறான தகவலை கண்டு அவர்கள் பின் வாங்க போவதில்லை, என்றும் கூறினார்.