ராஜஸ்தான் மாநிலத்தில் நடைப்பெற்ற கதாகாலட்சேபம் நிகழ்ச்சியில் எதிர்பாரா விதமாக பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் ராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்துகொண்டனர். 


இந்நிகழ்ச்சிக்காக பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் அவர்கள் அமரவைக்கப்பட்டனர். மாலை சுமார் ஐந்து மணியளவில் பந்தலின் ஒருபகுதி திடீரென்று எதிர்பாராவிதமாக சரிந்து விழுந்தது. இரும்பு உத்திரங்களும் பெயர்ந்து கீழே சாய்ந்தன. இதை கண்ட் அஞ்சிய மக்கள் பீதியில் கூச்சலிட்டவாறு உயிர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். என்ன செய்வதென்றே தெரியாமல், ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டும், கீழே விழுந்தும் ஒடினர்.


இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் இந்த விபத்தில் பலியான 14 பேரின் பிரேதங்களை மீட்டனர். 


மேலும் படுகாயங்களுடன் மீட்டப்பட்ட 20-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்துளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ‘ராஜஸ்தானில் பார்மர் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து துரதிஷ்டவசமானது. சிகிச்சைபெற்றுவருபவர்கள் விரைவில் குணமாக வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். 



ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் இது குறித்து தெரிவிக்கையில்., "இந்த நிகழ்வு வருந்ததுக்குரியது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தில் அமைதி நிலவவும் இறைவனிடம்பிரார்த்திக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள், விரைவில் மீள வேண்டும்"  என தெரிவித்துள்ளார்.