சிக்கிமில் மேக வெடிப்பு: சிக்கிமில் மேக வெடிப்பைத் தொடர்ந்து டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். டிஃபென்ஸ் பிஆர்ஓவின் கூற்றுப்படி, செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் லோனாக் ஏரியின் மீது மேகம் வெடித்தது, அதைத் தொடர்ந்து லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ முகாம், 41 ராணுவ வாகனங்கள் மூழ்கின


குவாஹாட்டி ராணுவ பாதுகாப்புப் பிஆர்ஓ கூறுகையில், லாச்சென் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பு காரணமாக திடீரென டீஸ்டா ஆற்றில்  வெள்ளம் ஏற்பட்டது. மேக வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் திடீரென 15 முதல் 20 அடி வரை அதிகரித்தது. ஆற்றை ஒட்டிய பகுதியில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திடீரென தண்ணீர் அதிகரித்ததால், சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளும் மூழ்கத் தொடங்கின. இங்கு சிங்டம் அருகே பர்டாங்கில் நிறுத்தப்பட்டிருந்த 41 ராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கின. மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுவரை 80 உள்ளூர்வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர் எனக் கூறப்பட்டு உள்ளது.