சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் லாச்சனில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள ஜெமாவில் காலை 8 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை, ஒரு இராணுவ வாகனம் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே வடக்கு சிக்கிமில் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில், 4 வீரர்கள் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி இது குறித்து கூறுகையில், காயமடைந்தவர்கள் வடக்கு வங்காளத்தில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிக்கிம் மாநிலத் தலைநகர் காங்டாக்கிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள லாச்சனில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஜெமா என்ற இடத்தில் காலை 8 மணியளவில் இந்த விபத்து நடந்தது என்றார்.


வாகனத்தில் 20 வீரர்கள் பயணம்


சுங்தாங் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) அருண் தாடல் கூறுகையில், ராணுவ வாகனம் 20 வீரர்களுடன் எல்லைப் பகுதிகளை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாகனம் ஜெமாவை அடைந்தவுடன், ஒரு திருப்பத்தில் சாலையை விட்டு விலகி நூற்றுக்கணக்கான அடி பள்ளத்தில் விழுந்தது.


மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் - அதிரடி அறிவிப்பு


இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’ என்றார்.


 



 


பள்ளத்தில் விழுந்து ராணுவ பேருந்து நொறுங்கியது. சட்டெனில் இருந்து தாங்கு நோக்கிப் புறப்பட்ட மூன்று பேருந்துகளின் அணிவகுப்பில் இந்த வாகனமும் அடங்கும். ஜெமாவில் ஒரு சாய்வான சாலையில் ஒரு கூர்மையான திருப்பத்தை எடுக்கும் போது பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் வீரமரணம் அடைந்தவர்களில் 3 ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் (JCO) மற்றும் 13 ஜவான்கள் அடங்குவர்.


விபத்து நடந்த இடத்தில் இருந்து 16 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்த நான்கு வீரர்களின் நிலை தெரியவில்லை என்று லாச்சனில் இருந்து போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்தில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக காங்டாக்கில் உள்ள அரசு எஸ்டிஎன்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். பலியானவர்களின் படைப்பிரிவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | ’இதெல்லாம் பொய்யா?’ சிபில் ஸ்கோரை சுற்றியிருக்கும் கட்டுக்கதைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ