16 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட் !!
இன்டர்நெட் உலகின் ஜாம்பவானான கூகிள் நிறுவனத்தில் சண்டிகர் மாணவர் ஒருவர் ரூ. 1.44 கோடி வருடாந்திர சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.
உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்லில் வேலை செய்ய வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பட்டதாரிகளின் கனவாக இருக்கும். இந்நிலையில், சண்டிகர் மாநிலத்தின் 16 வயது சிறுவனுக்கு இந்த மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது கூகிள்.
ஹர்ஷித் சர்மா சண்டிகர் மாநிலத்தின் செக்டார் 33 பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஹர்ஷித் சர்மா அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் கூகிள் நிறுவனத்தின் பணியாற்ற உள்ளார்.
கிராபிக்ஸ் அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் கூகிள் நிறுவனத்தின் செயல்பட்டு வரும் கிராபிக்ஸ் அணியில் ஹர்ஷித் சர்மா தனது ஒரு வருடப் பயிற்சிக்குப் பின் முழு ஊழியராகப் பணியாற்ற உள்ளார். சம்பளம் கூகிள் நிறுவனத்தின் தேர்வாகியுள்ள ஹர்ஷித் சர்மாவிற்கு ஒரு வருடம் இந்நிறுவனத்தின் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த ஒரு வருட காலத்திற்கு மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படும். பயிற்சி காலம் முடிந்த பின், இவருக்கு மாதம் சுமார் 12 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார் ஹர்ஷித் சர்மா.
10 வருட பயிற்சி இதுகுறித்து ஹர்ஷித் சர்மா கூறுகையில், கடந்த 10 வருடமாகக் கிராபிக்ஸ் டிசைனில் நான் கற்றுக்கொண்டு வருகிறேன், இத்துறையில் போதிய அளவிலா அனுபவம் கிடைத்த நிலையில் இணையதளத்தில் எனக்கான வேலையைத் தேட துவங்கினேன் என்று கூறினார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் கூகிள் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பம் செய்தேன், நான் தாயரித்த போஸ்டர்கள் மூலம் நான் தேர்வாகி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். நேர்காணல் இணையத்தின் மூலமாக நடைபெற்றது.
அப்பாயின்மென்ட் ஆர்டர் தேர்வில் வெற்றிபெற்றதை அடுத்து, கூகிள் நிறுவனம் ஜூன் மாதத்தில் கூகிள் நிறுவனம் ஹர்ஷித் சர்மாவிற்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துள்ளது. என்று ஹர்ஷித் சர்மா கூறினார்.