காதலனை தேடி சென்ற இளம்பெண்ணை 5 நாட்களாக அறையில் அடைத்து வைத்து கற்பழித்த 6 பேர் கைது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் ஓங்கோல் நகரில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியை மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு நபர்களால் ஐந்து நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிரைவர் அம்பி ஷெட்டி ராமு என்பவருக்கும் ண்டூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ஏற்பட்ட பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்த சம்பவம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவர பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். 


இந்நிலையில், அந்த சிறுமி தனது காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி வந்த சிறுமி அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்க வில்லை. இதையடுத்து, அவர் பேருந்து நிலையத்திலேயே இரவு 11 மணி வரை காத்திருந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்த ஒரு கடைக்காரர் அந்த சிறுமியிடம் மேலோட்டமாக பேசியுள்ளார். இதையடுத்து, நடப்பதை தெரிந்து கொண்ட அவர் அந்த சிறுமிக்கு உணவு வாங்கிகொடுத்து மாடுக்கு அழைத்து சென்றுள்ளார். 


இதையடுத்து இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த் ரெட்டி, மகேஷ் ஆகியாரை அழைத்து வந்தார். இளம் வயது மாணவன் ஒருவனும் இவர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை கற்பழித்தான். இப்படி சுமார் 5 நாட்கள் அந்த இளம் பெண்ணை தங்கவைத்து, 6 பேர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 


இந்த தகவலை அறிந்த காவலர்கள், இளம் பெண்ணை கற்பழித்த ஷேக்பாஜி, அவருடைய நண்பர்கள் ஸ்ரீதர், மகேஷ், மற்றும் 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 7 பேரை கைது செய்தனர். இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓங்கோல் சென்று மகள் நிலையை அறிந்து கண்ணீர் விட்டு கதறினார்கள். அவர்களிடம் இளம்பெண் ஒப்படைக்கப்பட்டாள்.


பின்னர் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்த அவர்கள், “எங்கள் மகள் வாழ்க்கையை சீரழித்தவர்களை நடுத்தெருவில் வைத்து தூக்கிலிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி கூறிய ஆந்திர மந்திரி சுஜாதா, “குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து கைது செய்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.