இன்று பாராளுமன்ற தாக்குதல் 16-ம் ஆண்டு நினைவு தினம் : தலைவர்கள் அஞ்சலி
இன்று பாராளுமன்ற தாக்குதல் 16-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. பல தலைவர்கள் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
2001-ம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 13) பாராளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தார்கள். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவாக 16-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னால் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.