வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது T20I கிரிக்கெட் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் (அருண் ஜெட்லி ஸ்டேடியம்) நடக்கிறது.


டெல்லியில் கடும் காற்று மாசு நிலவி வரும் சூழ்நிலையில், இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் T20I போட்டி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களம் இறங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் சிவ்ம் துபே அறிமுகமாகிறார்.


இந்தியா XI: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், கிருனல் பாண்ட்யா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், கலீல் அகமது


பங்களாதேஷ் XI: லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், முகமது நைம், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், அல்-அமீன் ஹொசைன்.


இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துகிறார். ஹர்திக் பாண்ட்யா காயத்தால் ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் சிவம் துபே அறிமுகமாகிறார்.