குடியரசு தின விழாவின் போது டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகளை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கிழக்கு டெல்லியில் லாஜ்பத் நகர் மற்றும் கேஸ் பைப்லைனில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது:-


கடந்த 20-ம் தேதி இரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் லத்திப் கனை (எ) தில்வார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், காஷ்மீர் சென்ற அதிரடிப்படையினர், பந்திபோரா பகுதியில் ஹிலால் என்ற தீவிரவாதியை கைது செய்தனர். இவ்வாறு போலீஸார் கூறினர். 


இந்நிலையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு மேலும் பல பகுதிகளில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.