கடுமையான மூடுபனி காரணத்தால் 20 ரயில்கள் தாமதம்: வடக்கு ரயில்வே
டெல்லிக்கு புறப்படும் 20 ரயில்கள் தாமதமாகிவிட்டன, மேலும் வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி காரணமாக ஒரு சில ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
டெல்லிக்கு புறப்படும் 20 ரயில்கள் தாமதமாகிவிட்டன, மேலும் வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி காரணமாக ஒரு சில ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
வட மாநிலங்களில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் காட்சித் திறன் குறைந்து, டெல்லி நோக்கி வரும் ரயில்கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமதமாக ஓடுவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர். மேலும் இன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதாலும், மற்றும் தண்டவாளம் சரியாக தெரியாத காரணத்தினாலும் ரயில்கள் வழக்கத்தைவிட மெதுவான வேகத்தில் இயங்கி வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் அடர் பனிமூட்டம் இருந்த நிலையில், சில இடங்களில் மழையும் பெய்தது. இதனால் டெல்லியில் சற்று காற்று மாசு குறைந்து, காற்றின் தரம் அதிகரித்துள்ளது. அதேசமயம் மோசமான வானிலை காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வடமாநிலங்களில் நிலவும் மிகவும் மோசமான வானிலை காரணமாக 20 ரயில்கள் தாமதமாகச் செல்கின்றதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி காரணமாக ஒரு சில ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.