எதிர்வரும் மிசோரம் சட்டமற்ற தேர்தலில் போட்டியிட 211 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இதுவரை 211 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில் சிலர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். குறிப்பிகா முதல்வர் லால் தன்ஹாவ்லா தனது சொந்த தொகுதியான ஷெர்ஷிப் மற்றும் சம்பாய் தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


சோரம் மக்கள் இயக்கத்தின் (ZPM) முதல்வர் வேட்பாளர் லால்துஹோமா செர்ச்சிப் மற்றும் அய்சால் மேற்கு ஆகிய இருதொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


மிசோரம் மாநிலத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் இன்று (நவம்பர் 9) என்பதால், இதுவரை வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் பட்டியலினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவினை திரும்ப பெற வரும் நவம்பர் 14 இறுதி நாளாகும். அன்றைய தினத்திற்கு பின்னரே மிசோரம் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.


மிசோரம் | 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில்


  • வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018

  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018